பக்கம்:அமுதவல்லி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 57


ரூபாய் விதி போல் நமட்டுச் சிரிப்புச் சிரித்ததோ, என்னவோ?...

   அப்போது!
   "சுப்பையா இருக்குதா?” 
   "யாரது?... ஒ , பிரசிடெண்ட் அண்ணனா?"
   "வாங்க, உட்காருங்க!"
   "இவங்க நம்ப ஹைஸ்கூல் வாத்தியார். அவர் கிராம சேவக்!”
   "ஓ...வணக்கம்! வணக்கம்!"
   "தம்பி உடம்பு ரொம்ப இளைச்சிட்டுதே?"
   “நாலைஞ்சு மாசமாய் படுத்த படுக்கை ஆகிட்டேனே!”
   "உடம்பைப் பார்த்துக்கிடுங்க, தம்பி!"
   "ம்!"
  "சாப்பாடு ஆயிடுத்தோ?”
   "ஓ!"
   காமராஜ் பசுங்கன்றாக வந்து நின்றான். புத்தக மூட்டையைப் போட்டுவிட்டு அடுப்படிக்கு ஓடினான். அன்னையின் கைச்சாடை கண்டு கம்மென்று நின்றான்.
   “என்ன விசேஷமுங்க,அண்ணன்?” என்று விவரம் கோரினான் சுப்பையா, அவன் மனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணத் தலைப் பட்டது.
  "தம்பி, தேசியப் பாதுகாப்பு நிதிக்கு வசூல் பண்ணிக்கிட்டிருக்கோம். அதுக்கு உங்க பங்குக் காணிக்கையையும் சேகரம் பண்ண வந்திருக்கோம். வார திங்கட்கிழமை கலெக்டர் கிட்டே கொண்டு போய்ச் சேர்க்கணும்...

அ- 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/59&oldid=1376192" இலிருந்து மீள்விக்கப்பட்டது