பக்கம்:அமுதவல்லி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
துரை. இராமு பதிப்பகம்,
163, C.A.R. வளாகம்,
முத்துரங்கம் சாலை, மேற்கு தாம்பரம்,
சென்னை-600 045

.

பதிப்புரை


எழுதுவது என்பது எளிதல்ல. சிறப்பாக எல்லோரும் படிக்கக் கூடிய கதைகள் எழுத தனி ஆற்றல் வேண்டும். சிலர் எழுதுவது அறிஞர்களுக்கு மட்டுமே விளங்கும் . இன்னும் சிலர் பாமரர்களுக்கு மட்டுமே எழுதுவர், சிலர் இந்த இருசாராரையும் மகிழ்விக்க முடியாமல் தங்கள் எழுத்துக்களை வடிப்பார்கள் . மிகச் சிலரே தாங்கள் வடிக்கும் எழுத்க்களை எல்லோரும் மகிழ்வுடன் ஏற்கும்படிச் செய்வார்கள்.

இம்மிகச் சிலரில் ஒருவரக விளங்குபவர் திருமிகு பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள். எளிய வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழும் அவருக்கு என்று ஒரு தனி நடை; மிகச் சிறந்த உண்மைகள் எல்லாம் மிக எளிமையாக உள்ளன என்ற கருத்தை எல்லோரும் ஏற்கும் வண்ணம் எழுதும் ஆற்றல்; வாசகர்கள் குழம்பிப் போகாமல் தெளிவாகத் தன் கருத்துக்களைக் கூறும் பாங்கு; ஒவ்வொருவருக்கும் இன்பமாக வாழ அத்தியாவசியமான அறநெறிகளுக்கு அவர் அளித் திடும் உயரிய மதிப்பு; இவை அனைத்தும் அவருக்குக் கை வந்த கலை.

அன்னாருடைய ‘அமுத வல்லி’ எனும் இச்சிறு கதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம்.

அன்புள்ள,
துரை. இரா.மு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/9&oldid=1027319" இலிருந்து மீள்விக்கப்பட்டது