உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவைப் பார்! 1. நியூயார்க் உலகின் செல்வ நிலையை ஆக்குந்திறனும் அழிக்குந் திறனும் பெற்றுள்ள வால் ஸ்ட்ரீட், உலகிலேயே மிக நீள மான பிராட்வே என்னும் சாலை, ஓரிடத்தில் பல நூறு தியேட்டர்கள், ஐம்பது வானொலி நிலையங்கள், 400 மீட்டர் உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 840-ஏக்கர்ப் பரப் புள்ள சென்ட்ரல் பார்க் என்னும் பெரிய பூங்கா, உலகத் துக்குப் புதுப்புது நாகரிகங்கள் உண்டாக்கும் ஐந்தாவது அவென்யூ என்னும் சாலை ஆகியவை நியூயார்க் நகரில் இருக்கின்றன. 20 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட தும், குபேரர்களும், பல நாட்டு அமைச்சர்களும், ஐக்கிய காடுகள் சபைக்குச் செல்லும் தூதர்களும் தங்குவதுமான வால்டார்ப் அஸ்டோரியா ஹோட்டலும், ஒரு நூறாயிரம் மாணவர்கள் பயிலும் நியூயார்க் நகரப் பல்கலைக் கழகமும் நாற்கோன ண வடிவிலுள்ள 'மாடிசன் ஸ்கொயர் கார்டன்' என்னும் விளையாட்டு அரண்மனையும், 30 மாடிகளுள்ள சிறைச் சாலையும், உலகிலேயே பெரிய இரயில் நிலையங் களும் இக் குபேர பட்டணத்தில் உள்ளன. பகலில் ஒரு கோடி மக்களும் இரவில் 80 லட்சம் மக்களும் வாழும் நியூயார்க் நகரம் இன்றைய விலையில் 8000 கோடி ரூபாய் பெறுமானமுள்ளது. இத்தகைய பூலோக சுவர்க்கத்தில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் நாள் நான் கால் வைத்தேன்.