102 களும் கல்லூரிகளும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களும் இருப்பதாலேயாம். விளம்பரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுபவர்களும் அமெரிக்கா வில் மிகப் பலர் இருக்கின்றனர். பெரிய அலுவலகங் களிலும் தொழிற்சாலைகளிலும் சொந்தமாக விளம்பர இலாகாக்கள் இருக்கின்றன. பலவகை விளம்பரங்கள் ஒவ்வொரு நிமிஷமும் கொட்டை எழுத்துக்களில் நேரத்தைத் தானே காட்டும் மின்சார விளக்குகளுள்ள கருவிகளைத் தம் கடைகளின் வாயிலில் அமைத்து விளம்பரப் படுத்துவதும், சாலையில் செல்லுவோரின் கவனத்தைக் கவரும்படியாகப் பல பொருள்களை மின்சார விளக்கு களால் விளம்பரப்படுத்துவதும், பலநிற விளக்கின் ஒளி களால் சொற்களை அமைப்பதும் வழக்கமாகிவிட்டன. அமெரிக்கர் தம் அரசியல் தலைவர்கள் பெயரை விளம்பரங்களில் பயன்படுத்தாததும் குறிப்பிடத் தக்கது. ட்ரூமன் ஹோட்டல், ஐசன்ஹோவர் ரேடியோ, ரூஸ்வல்ட் சிகரட் போன்ற பெயர்கள் அமெரிக்காவில் இல்லை. இவ்வாறு வணிக விளம்பரத்துக்குத் தம் தலைவர்கள் பெயரைப் பயன் படுத்தாமல், அமெரிக்கர் தம் தலைநகருக்கு அமெரிக்கக் குடியரசின் முதல் தலைவராகிய வாஷிங்டன் பெயரை அமைத்திருப்பது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெளிவரும் விளம்பரங்களுக்கு எடுத் துக்காட்டாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்: "நவம்பர் 2-ஆம் தேதி, பிரின்ஸ்டனில் நடக் கும் கால் பந்தாட்டத்துக்குச் செல்லுங்கள்; ஓடும் ரயிலிலேயே உணவுச் சாலையுள்ள ஸ்பெஷல் ரயில்கள் 10-45 மணி முதல் 8 நிமிஷத்துக்கு ஒரு தடவை நியூயார்க் பென் சில்வேனியா ஸ்டேஷனிலிருந்து புறப்படும்."
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/103
Appearance