111 ஸ்கிரைபர்' (Hell Scriber) என்று பெயர். ஹெல் என்ற ஜெர்மன்காரர் இதைக் கண்டு பிடித்தவர். ஸ்கிரைபர் அல்லது 'ஸ்கிரைப் மிஷின்' என்பதற்கு ஜெர்மன் மொழியில் 'டைப்ரைட்டர்' என்பது பொருள். பாஸ்சிமிலி (Fascimile) பாஸ்சிமிலி என்ற புதியதோர் இயந்திரத்தைப் பற்றி யும் சிறிது கூறுவோம். இதன் உதவியால், பத்திரிகை அதன் அலுவலகத்தில் அச்சிடப்பட்ட சில வினாடிகளில், நாம் இருக்கும் இடத்திலுள்ள ஒரு கருவி, பத்திரிகையை நமக்குத் தருகிறது! ஒரு வினாடியில், 5லட்சம் சொற்களை இந்த இயந்திரம் அச்சிடுகிறது. பாஸ்சிமிலி பரவத் தொடங் கிய பின்னர், பத்திரிகை விற்கும் சிறுவர்களுக்கு வேலை யில்லாமல் போய்விடும்; ரோட்டரி அச்சியந்திரங்களும் பயனற்றுப் போய்விடும்; வானவழியாகவே பல்கலைக் கழகங்கள் நடத்தலாம்; ரஷ்யரும் அமெரிக்கரும் தத்தம் ஒற்றர் வாயிலாக, ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை மற்றொரு நாட்டில் சில வினாடிகளிலேயே தெரிந்து கொள்ள வும் இயலும்! என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. நம் நாட்டில் 'இந்து' இதழின் பாஸ்சிமிலிப் பதிப்புக் கோவை யிலிருந்தும் மதுரையிலிருந்தும் வெளிவருகிறது. தலைப்புச் செய்திகள் நெடுந்தொலைவில், சாலைகளில் நடந்து செல்பவர்களும் படிப்பதற்கு வசதியாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை யாளர் தம் அலுவலகத்தைச் சுற்றி நாற்புறமும் தெரியும் படி மின்சார விளக்குகள் உள்ள பலகையில் தலைப்புச் செய்திகளை உடனுக்குடன் அறிவிக்கிறார்கள். ஒரு நிமிஷம் மட்டுமே இவ்விளக்குகள் ஒளியுடன் இருக்கின்றன; எழுத்துக்கள் ஓடுவனபோல் தோற்றம் தரும்படி இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/112
தோற்றம்