114 ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டபோது,வாரம் பத்திரிகைகள் ஒரு வாரத்திய இதழ் முழுவதும் அதைப் பற்றியே எழுதி வெளியிட்டன. இவற்றில் ஆசிரியர் குறிப்புக்கள் இருப்பதில்லை. படப் பத்திரிகைகள் படங்களையே முதன்மையாக. வைத்துக் கட்டுரைகளை வெளியிடுவன. சான்றாக ஓர் இடத்தில் 20,000 புகைப் படங்களை வாராவாரம் ஊடுருவிப்பார்த்து, அவற்றிலிருந்து பத்துப்பத்துப் களுள்ள 25 கதைகளை வெளியிடுகின்றனர். டைஜஸ்ட் படங் இப்போது உலகில் பரவியிருக்கும் டைஜஸ்ட் என்ற பத்திரிகைகள் அமெரிக்காவில்தான் தோன்றின. அந்த நாட்டில் டைஜஸ்ட்கள் மிகப் பல உள்ளன. இவற்றுள் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற மாதப் பத்திரிகையை இரண்டு கோடிமக்கள் வாங்குகின்றனர்; 2500 பேர் இதன் அலுவ லகத்தில் வேலை செய்கின்றனர். இப்பத்திரிகை 11 மொழி களில், 19 பதிப்புக்களாக வெளிவருகிறது. இதில் சேர்க்கப்படும் கட்டுரைகள் அனைத்தும் சேர்ந்து ஆதார மான பேரகராதியாக விளங்குகின்றன. மற்றப் பத்திரி கைகளிலிருந்து பகுதிகளைப் பொறுக்கவும், பொறுக்கிய வற்றைச் சுருக்கமாக எழுதவும், வரிசைப்படுத்தவும், தக்க அமைப்புகளுடன் வெளியிடவும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அலுவ லகத்தில் தனித்தனி இலாக்காக்கள் உள்ளன. டைஜஸ்ட் என்பது பலநிறக் கற்கள், பல நிற ஒளிகள் .. பல்வேறு குணங்கள் ஆகியயாவும் நிறைந்த நவமணிமாலை போன்றதாகும். பத்திரிகை படிப்பவர்கள் தாங்கள் படித்த சுவையான பகுதிகளைக் கத்தரித்துத் தங்கள் நண்பர்களுக்கு அனுப்பியதைத் தொகுத்து அச்சிட்டே டைஜஸ்ட் வெளியிட்டார்கள் புகழ்பெற்ற ஒரு நூலின் சுருக்கத்தையும் ஒவ்வோர் ஒவ்வோர் இதழிலும் இதழிலும் சேர்ப்பதுண்டு..
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/115
Appearance