129 என்ற ஒரு குழு அமைத்துள்ளோம். தாமோதர் ஆற்றின் வளத்தைப்பெருக்கி, அதை நாட்டுக்குப் பயன்படுத்து வதற்குத் திட்டமிட்டுள்ளோம். கோசி, துங்கபத்ர ஆறு களிலும் பேரணைகள் கட்ட ஏற்பாடாகியுள்ளது. வேறு இடங்களிலும் மின்சார வளர்ச்சித் திட்டங்கள் உருவாகி வருகின்றன. கேள்வி:- இவற்றால் உற்பத்தி மிகுதியாகி, ஏழ்மை குறையும் என்று எதிர்பார்க்கிறீர்களா? பதில்:- ஆம், வறுமையைப் போக்க விஞ்ஞானத்தை முற்றும் பயன்படுத்த நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். கேள்வி:- இந்தியாவில் இப்போது தொழில்வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது? பதில் :- ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்களும் பல நூறு பஞ்சாலைகளும் உள்ளன. இந்தியா தனக்குத் தேவையான சர்க்கரையையும் வர்ணத்தை (பெயின்ட்) யும் சிமெண்டையும் உற்பத்தி செய்கிறது. உலகின் பெரிய இரும்பு எஃகு உற்பத்தி நிலையங்களில் ஒன்று, இந்தியாவில் ஜாம்ஷட்பூரில் இருக்கிறது. கேள்வி:- மேலும், தொழில் வளர்ச்சி அடைந்து இந்தியா வெளிநாடுகளுக்குத் தன் உற்பத்திகளை விற்குமா? பதில்:- சில பொருள்களை நாங்கள் ஏற்றுமதி செய் வோம். உதாரணமாக இந்தியத் துணிக்கு, இப்போது கூட,கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகள் இங்கெல்லாம் நல்ல மதிப்பு இருக்கிறது. கேள்வி :- இப்பொருள்களை விற்று அவற்றுக்குப் யதிலாகப் பத்திரிகை காகிதமும் இரசாயனப் பொருள் களும் வாங்குவீர்கள் போலும்?
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/130
தோற்றம்