131 வளர்ச்சிக்கும் பதில்:- ஆம், தொழில் உற்பத்திப் பெருக்கத்துக்கும் தொழிற் கல்லூரிகள் மிகுதியாக வேண்டும். விஞ்ஞான ஆராய்ச்சியும் பெருக வேண்டும். இத்துறைகளில் இந்தியாவில் இப்போது அக்கறை ஏற் பட்டிருக்கிறது. 200 ஆண்டுகளில் பிரிட்டிஷார் செய்ததை விடக் கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய அரசியலார் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மிகுந்த ஊக்கம் தந்திருக்கின்ற னர். சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில், எங்கள் தலைமை அமைச்சர், ஒரு மின்சார-இரசாயன ஆராய்ச்சி நிலையத்துக்கு அடிகோலினார். இதைப்போன்ற நிலையம் சூயஸ் கால்வாய்க்குக் கிழக்கே இல்லை. பௌதிக, இரசாயன ஆராய்ச்சிகளுக்காக நாடெங்கும் சோதனைச் சாலைகள் தோன்றிய வண்ணமாக உள்ளன. கேள்வி - தொழில் வளர்ச்சி மிகுதியாக மிகுதியாகக் கம்யூனிசம் செல்வாக்குப் பெறுமா? பதில்:- இந்தியரின் மரபுவழி வாழ்க்கை நெறி கம்யூனிசக் கொள்கைக்கு மாறுபட்டது. கம்யூனிசம் உரிமையை உறுதிப்படுத்தும் இயக்கத்தின் வளர்ச்சி யாகும்; கடமையை வற்புறுத்துவது இந்தியத் தத்துவ சாத்திரத்தின் அடிப்படையான கொள்கை. எனவே இந்தியாவில் கம்யூனிசம் எளிதிலோ வேகமாகவோ வெற்றி பெறாது. இதனால், இந்தியாவுக்கு அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் பொருந்தும் என்று கருதி விடக்கூடாது. இந்திய மக்களிடையே பொருளாதார நிலை மிகவும் வேறுபட்டிருப்பதால், சுவீடனைப்போல் ஒரு கலப்புப் பொருளாதார அமைப்புத்தான் இந்தியாவுக்கு ஏற்றது கேள்வி :- அப்படியானால், சிறிய வியாபாரங்கள் தனி நபர்கள் கையிலும், பெரிய தொழிற்சாலைகள் கூட்டுறவு முறையிலும் இருக்குமா? பதில்:-ஆம். இந்து பொதுக் குடும்பமே ஒரு. கூட்டுறவு ஸ்தாபனந்தான்; மேலும், மூலாதாரமா
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/132
Appearance