150
- உங்கள் பேங்கைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாரம்"
(Know Your Bank Week) என்ற ஒரு வாரத்தை அமெரிக்கப் பேங்குகள் கொண்டாடுகின்றன; இவ்வாரத்தில் சில பேங்கு கள் தம் வாடிக்கைக்காரர்களுக்கு விருந்தளிக்கின்றன. பத்திரிகைகள் பேங்குகளைப்பற்றித் தனி மலர்கள் வெளியீடு கின்றன. கல்லூரி ஆசிரியர்கள் மாணவரைச் சிறுசிறு பிரிவு களாகப் பேங்குகளுக்கு அழைத்துச் சென்று, அவற்றின் நிர்வாக முறையை விளக்கிக் கூறுகின்றனர். வானொலியி லும் தொலைக்காட்சியிலும் பேங்குகளைப் பற்றிச் சொற் பொழிவுகளும் நாடகங்களும் விளம்பரங்களும் நிகழ் கின்றன. இன்சூரன்ஸ் கம்பெனிகள் அமெரிக்காவில் இன்சூரன்ஸ் தொழிலும் பெருவளர்ச்சி யடைந்திருக்கிறது. ஒவ்வோர் ஐந்து குடும்பங்களிலும் நான்கு குடும்பத்தினர் இன்சூர் செய்திருக்கிறார்கள். ஒரு குடும்பத் தின் சராசரி இன்சூரன்ஸ் தொகை 9,000 டாலராம்! போர்ப்படைகளில் பணியாற்றியவருக்கு, குறைந்த தவணைத் தொகைகளில் இன்சூரன்ஸ் செய்யும் வசதியை அரசினலார் செய்து கொடுத்திருக்கிறார்கள். முதிர்ந்த வயதுச் செலவுக் காகத் தொழிலாளருக்குத் தனியான இன்சூரன்ஸ் ஏற்பாடு களும் செய்யப்பட்டிருக்கின்றன. 14. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நோய் ஏற்பட்டால் அதை குணப்படுத்த ஒரு வைத்தி யரிடம் செல்லுகிறோம்; நீதி மன்றத்தில் வழக்கை நடத்த ஒரு வழக்கறிஞரை நாடுகிறோம்; இங்ஙனமே, பிரயாணம் செய்யும்போது பிரயாணத்தொழில் நிபுணர்களின் உதவியைப் பயன்படுத்த வேண்டும் என்பது அமெரிக்கர் கருத்து.