உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 லும், அறிவிப்புப் பலகைகளிலும் பெயர் மாற்றி யாக வேண்டும். 8லட்சம் புதிய துணிகளும், -34,000 கண்ணாடிப் பொருள்களும், 1,27,000 வெள்ளிச் சாமான்களும் வாங்கி, அவற்றில் புதிய பெயர் பொறிக்கப்படும். ஹோட்டல் ஸ்டேட்லர்' என்பது பழைய பென்சில்வேனியா ஹோட்டல் தான் என வாடிக்கைக்காரர்கள் தெரிந்து கொள்வதற்காகச் சில 6 ஆண்டு களுக்கு விளம்பரம் செய்யப்படும். ரயில், கப்பல் ஆகாய விமானக் கம்பெனிகளுக்கும், பிரயாண ஸ்தாபனங்களுக்கும், போலீசாருக்கும், ரயில்நிலை யங்களில் சுமை தூக்கும் தொழிலாளருக்கும் பெயர் மாறுதல் அறிவிக்கப்படும். ஸ்டேட்லர் செயின் இந்த ஹோட்டலைச் சென்ற ஆகஸ்ட்மாதம் 10 ஆம் தேதி ஒரு கோடி 30 லட்சம் டாலருக்கு வாங்கியிருக்கிறது. ஸ்டேட்லர் செயினைச் சேர்ந்த ஹோட்டல்கள் பாஸ்டன். பஃபலோ கிளிவ்லண்டு, டெட்ராயிட், சென்ட்லூயி, வாஷிங்டன், பிட்ஸ்பர்க் நகரங்களிலும் உள்ளன. பென்சில்வேனியா ஹோட்டல் 26 மாடி களுள்ளது; 1919-60 தொடங்கப்பட்டது; அப் போது உலகிற்பெரிய ஹோட்டலாக இருந்தது." இப்போது உலகிற் பெரியதாக இருப்பது வால்டார்ப் அஸ்டோரியா என்ற ஹோட்டல். இது 47 மாடிகளுள்ள கட்டிடத்தில் இருக்கிறது. வால்டார்ப் என்பது ஜெர்மனி விலுள்ள ஒரு கிராமம். அங்கிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிக் குபேரர்களான அஸ்டர் குடும்பத்தார் இந்த ஹோட்டலைச் கட்டியிருக்கிறார்கள். ஹோட்டல்கள் சங்கம் அமெரிக்காவில் ஹோட்டல் தொழில் ஏழாவது பெரிய தொழிலாக விளங்குகிறது. மொத்தம் 1500 கோடி டாலர்கள் இந்தத் தொழிலில் பயன்படுத்தப்பட்டிருக்