உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவின் சிறப்பு உடல் 168 பெரிதாகிவிடாமலிருப்பதற்காக, உணவைன் குறைத்து உண்பவர்களும் அமெரிக்காவில் மிகுதியாக உள்ளனர். பால் சேர்க்கப்பட்ட ஆகாரங்கள் (Milk Foods), ஐஸ்கிரீம், பலவிதமான மிட்டாய்கள், சாக்லட், வாழைப்பழம் ஆகியவற்றை வயதுவந்த அமெரிக்கரும் விரும்பியபோதெல் லாம் உட்கொள்ளுகின்றனர். அமெரிக்கரின் உணவு உடலுக்கு நன்மை தரத் தக்க படி அமைக்கப்பட்டுள்ளது. புளிப்பு, கார்ப்பு, கைப்பு உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை அவ்வுணவில் காண இயலாது. நெய், குழம்பு, மோர் ஆகியவையும் அங்கும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, நம் நாட்டு உணவில் ஊறித் தோய்ந்தவர்களுக்கு அமெரிக்க உணவு சுவைப்ப தில்லை. உணவும் பேச்சும் அமெரிக்கர் அளிக்கும் விருந்துகளில் சுவைமிக்க பற்பல உணவுகள் இருக்கும். ஆனால் அவற்றை அனுபவித்து உண்பது இயலாது. இதற்குக் காரணம் பெயரளவுக்குச் சாப்பிட்டுக்கொண்டு "தொண தொண என்ற று கொண்டிருப்பது அங்குப் பழக்கமாகிவிட்டதேயாகும். பேசிக் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்ணாயிருக் கும்' அமெரிக்கர், உணவு உட்கொள்ளும்போதே வேறொரு. வேலையில் ஈடுபடுவர். மேல் நாட்டவர் அனைவருமே காலைச் சிற்றுண்டியை அருந்தும்போது பத்திரிகையையும் படித்து முடித்துவிடுவர். அமெரிக்கர் பகலுணவைத் தம் அலுவலகத் தாருடன் உண்டு, அவர்களுடன் வாணிப விஷயங்களைப் பற்றி அப்போது உரையாடுவர்; மாலை நேரத்தில், பொழுது போக்குக்கழகங்களில் பிஸ்கோத்து, சாண்ட்விச் (Sandwich), தேயிலை ஆகியவற்றை உட்கொள்ளும்போதே, சமூக நலம்