195 ஆசிரியர் நியமிக்கப்பெற்று அவர்கள் மழலைச் செல்வங்களை கவனித்து வருகிறார்கள். குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவு கொடுக்கிறார்கள். புத்தகங்கள் இல்லாமலே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது பந்து, சக்கரம் கம்பி, குச்சி முதலியவற்றைக் கொண்டும், களிமண்ணால் உருவங்கள் செய்துகாட்டியும் குழந்தைகளின் அறிவை வளர்க்கிறார்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி இவைகளை வளர்ப்பதும் அந்தக் குழந்தைகளின் அன்றாட வேலையாக இருக்கிறது. கடிதம் எழுதுவது, சட்டைப் பொத்தான்களைத் தைத்துக். கொள்வது. மூன்றுகால் 'சைகிள்' ஓட்டுவது, தீயினின்றும் காத்துக்கொள்வது போன்றவற்றை அந்தக் குழந்தைகள் ஐந்து ஆண்டு நிறைவடைந்த பின்பு அறிந்துகொள்கிறார் கள், 9 வயது வரை அங்கு பெண்களே படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நம் நாட்டில் ஐந்தாம் வகுப்பில் ஏழு பேர் படித்தால், அவர்களில் ஒருவர்தான் மேல்நிலைப் பள்ளியை எட்டிப் பார்க்கிறார். ஆனால், இந்த அவலநிலை அங்கே இல்லை. கல்வியின் சிறப்பை ஒவ்வொருவரும் கல்வி நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். செலவில்லாமலே கற்பதற்கு அரசினர் மட்டுமன்றி, பெரும் செல்வர்களும். ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பதின்மூன்று வயதாகும்போது, வாழ்க்கையைப் பற்றி அனுபவ வாயிலாக அமெரிக்க மாணவர்கள் அறிந்துகொள் கிறார்கள். நாடகங்களிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் நேரத்தை மிகுதியாகச் செலவிடுகிறார்கள். உணவு சமைப்பது போன்ற தொழில்களையும் அவர்கள் பள்ளியிலே தெரிந்துகொள்கிறார்கள். ஓராண்டுக்கு ஒரு நாள் தங்கள் பெற்றோர்களுக்குத் தாங்களே சமைத்துப் பள்ளியில் விருந்து கொடுக்கிறார்கள். நம் குழந்தைகளைவிட அமெரிக்கக் குழந்தைகள் நல்ல உடற்கட்டோடு இருக்கிறார்கள். ஆகையால் அவர்களுடைய உருவத்தையோ அல்லது உயரத்தையோ பார்த்து, அவர்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/197
Appearance