உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 பள்ளிக்கு வரும் குழந்தைகளில் சிலர் வீட்டிலிருந்தே பகல் உணவு கொண்டு வருகிறார்கள். ஏனையோர்கள் மலிவான விலையில் பள்ளியில் கிடைக்கும் உணவைச்: சாப்பிடுகிறார்கள். வானொலி நிலையம், நகர மண்டபம், "பாங்க்”, அஞ்சல் நிலையம், பொருட்காட்சிச் சாலைகள், உயிர்க்காட்சிக் கூடங் கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று அங்கே உள்ளவற்றை விளக்கிக் கூறுகிறார்கள். மாணவர்கள் படங்கள் வரைவது, கேலிச் சித்திரங்கள் தீட்டுவது, வண்ண வேலைகள் செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டால் ஆசிரியர்கள் அவர்களைப் பாராட்டி ஊக்குவிக் கிறார்கள். அங்கே சிறு குழந்தைகள்கூட மாலை நேரத்தில்ஒரு கடையில் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தோ செய்தித்தாள்களும் சஞ்சிகைகளும் விற்றோ பணம் சேகரிக் கிறார்கள். அந்தப் பணத்திலிருந்து, அவர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வாங்கிக் கொடுக் கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களோடு கிறிஸ்தவக தேவாலயங்களுக்குச் செல்லுகிறார்கள். அங்கே அவர்களுக்குத் தனியாக ஒதுக்கப் பெற்ற அறைகளில் தாய்மார்கள் 'பைபிளி'லிருந்து சில பகுதிகளைப் படித்து விளக்கிக் கூறுகிறார்கள். வாய் மூக்கு, காது ஆகிய உறுப்புக்களுள் பொத்தான்,. நாணயம், குண்டூசி, 'ரப்பர்', பென்சில் துண்டு முதலிய வற்றை அமெரிக்கக் குழந்தைகள் போடுவதில்லை. ஆனால், விரல் நகத்தைக் கடிப்பது போன்ற தீய வழக்கங்கள் அவர்களிடமும் இருக்கின்றன.