226 ஒரு வீட்டை விலைக்கு வாங்கவேண்டுமானால் பணம் முழுவதையும் ஒரே சமயத்தில் செலுத்தாமல் வாங்கு வதற்குச் சலுகைகளும் வசதிகளும் உண்டு. பிறகு வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து ஒரு சிறு தொழிற்சாலையில் வேலைபார்த்து, 10 ஆண்டுகளுக்குப். அந்தத் தொழிற்சாலையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களும் உண்டு. சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் இது உண்மை நிகழ்ச்சி. திறமைக்கு வாய்ப்பு நல்கும் ஒரு நாடு உலகில் இருக்கிறது எனின், அது அமெரிக்காதான்! தமிழ்நாட்டு இளைஞர் பலர் கல்விச் செல்வத்தைத் தேடி யும் பொருட் செல்வத்தை நாடியும், உலகத்தின் மறு கோடி யிலிருக்கும் செல்வம் கொழிக்கும் அமெரிக்கச் சீடையைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். வந்தவரை வாழவைக்கும் அந்த நாடு அவர்களுக்கு இரு கரம் கூப்பி வரவேற்றிருக் கிறது. நொந்தவர்களுக்குக் கை கொடுத்திருக்கிறது. தனிப்பட்ட மனிதனின் உரிமையை உயிராக்கி, உழைப்பை உடலாக்கி, உலகின் பல பண்புகளை உடையா தக்கி மனித இனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது அமெரிக்கப் பெருநாடு. ஊக்கமும் உழைப்பும் அடைய அறிவும் திறமையும் எவ்வளவு இருந்தாலும் ஊக்கத் துடன் உழைப்பவருக்கே அமெரிக்கா முதலாவது இடத்தை வழங்குகிறது. முதலாவது இடத்தை ஒருவர் அவருக்கு மறு இடம் இல்லை என்று அமெரிக்கர் சொல்லுவார்கள் (There is no room for the- second best). இயலாவிடில், அமெரிக்காவிலுள்ள தமிழர் பலர் சிறந்த டாக்டர் களாகவும் கணித மேதைகளாகவும் கம்புயூட்டர் ஞானி களாகவும் அறிவியல் துறைகளில் உலகம் போற்றும். அறிஞர்களாகவும் திகழ்கின்றனர்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/228
தோற்றம்