உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 இந்தியாவுக்கு ஹிப்பிகள் ஆயிரக்கணக்கில் வருகிறார் கள். அவர்கள் பெரும்பாலும் செல்வாக்குடைய குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க நாகரிகத்திலும் வாழ்க்கை முறையிலும் அலுத்துப் போய்த்தான் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்துக் கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் அமெரிக்கருக்கு ஆர்வம் உண்டாகியிருக்கிறது.நம் நாட்டில் கோயில்களில் தேடுவார் இன்றி கிடக்கும் விக்கிரகங்களை யெல்லாம் அவர்கள் கவனமாகக் கொண்டு போய், பத்திர மாக வைத்திருந்து கலைக் கூடங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த மாளிகைகளில் வரவேற்பு அறைகளில் சிறப்பிடம் கொடுத்தும் இந்தியக் கலைச் சிறப்பையும் வேலைப்பாட்டை யும் உலகெங்கும் பரப்பியிருக்கின்றனர். தமிழ் மக்கள் தில்லை நடராசரையும், சீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் வருமாயின், நமது தெய்வங்களை வழிபட நாம் அமெரிக்காவுக்குத் தான் போக வேண்டியிருக்கும். இந்திய உணவையும் அமெரிக்கர் சிலர் சுவைக் கின்றனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர் மட்டுமின்றி அமெரிக்கர் சிலரும் ஆதரிக்கும் உணவு விடுதிகள் அமெரிக்க நாடெங்கும் பெரு நகரங்களில் நியூயார்க் நகரில் மட்டும் இந்திய உணவு கிடைக்கும் இடங்கள் 29.இது 1978-ஆம் ஆண்டுப் புள்ளி விவரம். உள்ளன. கடைசியாகத் திறக்கப்பட்ட இந்திய உணவுச்சாலை மட்ராஸ் உட்லண்ட்ஸ். இங்கு இட்லியும், பகோடாவும், போண்டாவும், தயிர்வடையும் கிடைக்கின்றன. சாப்பாட் டிற்கு 3 டாலர் 95 சென்ட் வாங்குகிறார்கள். இந்தியத் துணிகள், கோலாப்பூரில் செய்யப்படும் மிதியடிகள் (காலணி), சித்தார் என்னும் இசைக்கருவி ஆகியவற்றிற்கெல்லாம் அமெரிக்காவில் பெரிய அளவில் ஆதரவு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் தைத்து