உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மனநிலையும், உடல்நிலையும் தேறியிருக்கின்றன. மனிதன் எவ்வளவுதான் அறிவுடையவனாக இருந்தாலும் சாவு என்பது அவன் கையில் இல்லை என்பதை அமெரிக்கர் நன்றாக உணர்கிறார்கள். எனவே, உயிரோடு இருக்கும் வரை ஒழுங்கு முறையுடன் வாழவேண்டும், பொய் சொல்லக் கூடாது, தேவையில்லாமல் சத்தியம் செய்யக் கூடாது. குடிக்கவோ புகைபிடிக்கவோ, பிறரை ஏமாற்றவோ கூடாது. ஒழுக்கத்தவறு கூடாது என்றெல்லாம் நினைக்கிறார்கள். இந்தக் கருத்துக்கள் அச்சிட்ட அட்டைகளைப் பலருடைய வீடுகளில் காணலாம். I PROMISE CAREFUL TO BE GOOD 99 99 NOT TO LIE 99 99 SWEAR 29 99 DRINK 99 99 SMOKE 99 99 CHEAT NOT TO DATE THE OPPOSITE SEX THE FUNERAL IS TOMORROW! 30. அமெரிக்கன் சென்டர் அமெரிக்கத் தகவல் நிலையம் - யு.எஸ். ஐ. எஸ்.- என்ற பெயருடன் பல்லாண்டுகளாக இந்தியாவில் இயங்கி வந்த அமைப்பு 1978 முதல் அமெரிக்கன் சென்டர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.