உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 கே: செலவு எவ்வளவு ஆகும்? அதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? விக்கிரகம் என்ன வைக்கிறீர்கள்? பதில்: 1969-ல் இதைப்பற்றி நினைத்தோம். போகப் போகத் திட்டம் விரிவடைகிறது. 1977-ல் எங்கள் கனவு நிறைவேறிவிடும். எங்கள் முயற்சி எல்லா மொழியாளர் களுக்கும் உரியது. சைவருக்கும் வைணவருக்கும் பொது. அதனாலேயே விநாயகர் மட்டும் பிரதிஷ்டை. விநாயகர் அருளால் உலகெங்கும் இருள் நீங்கட்டும் என்பது எங்கள் இலட்சியம். பிள்ளையார் செய்யக் கல் எடுப்பது திருவண்ணாமலை மலையில்தானாம். அதை செய்து அன்பளிக்க, கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் முயற்சியால் பிள்ளையார்பட்டிக்கோவில் நகரத்தார்கள் இசைந்திருக் கிறார்கள். கே: அமெரிக்காவிலுள்ள திரட்டுவதாகத் திட்டம் இல்லையா? இந்துக்களிடம் பணம் பதில்: நோ. நோ. இந்திய டாக்டர்கள் அவரவர் வேலை பார்க்கும் மருத்துவ மனைகளில் 7, 000 டாலர் திரட் டினார்கள். பலர் தங்களால் இயன்ற நன்கொடை தந்து வருகிறார்கள். பத்மினி குழுவினர், அமெரிக்காவிலுள்ள இந்தியப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு நடனம் ஆடி, வசூல் செய்து வந்தார்கள். ஒரு லாட்டரிசீட்டு நடத்தியதி லும் பணம் சேர்ந்தது. இலவசமாக ஏவி. எம். அனுப்பிய தமிழ்ப்படத்தைப் போட்டுக் காட்டி, டாலர் சேகரித்தோம். ராஜகோபுரம், விமானம், வெண்கல நடராசர், பாவை விளக்கு, அன்ன விளக்கு, சர விளக்கு இவையெல்லாம் நன் கொடையாகக் கிடைத்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக திருப்பதி தேவஸ்தானம் உதவி செய்திருக்கிறது.