உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 உண்டு. சிற்றுண்டி முடிந்ததும் மற்றவர்கள் எழுந்து விடுவர். நானும் டாக்டர் சீகல்மனும் ஏதாவது ஒரு வெளி நாட்டைப்பற்றி 10 மணித் துளிகள் பேசிக் கொண்டிருப்போம். உணவு படைக்க ஓர் ஆள் இருக்கிறான். இந்தப் பணி புரிபவர்களுக்கு "பட்லர்" என்ற பெயர் வழங்குகிறது. நமக்கு வலப்பக்கமாக வந்து அவன் பரிமாறும்போது நமக்குவேண்டியதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிற் றுண்டிக்கு நான் போய் உட்கார்ந்ததும் 'குட்மார்னிங் சோமலெ' என்று சொல்வார்கள். சிற்றுண்டியில் முதலில் படைக்கப்படுவது பழச்சாறு. அடுத்தது முட்டை ; முட்டையைப் பலவகையாகத் தயாரிப் பார்கள். ஒரு நாளைக்கு அரைவேக்காடு. மறுநாள் அவித்த முட்டை ; மூன்றாம் நாள் முட்டைத் தேசை (ஆம்லெட்). பிறகு சீமை அவல் அல்லது பார்லிக்கஞ்சியைப் பாலும் சர்க்கரையும் சேர்த்து அமெரிக்காவில் சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியாவில் இப்பொருள்கள் தரமாக இல்லாததால் அவர்கள் உண்பதில்லை. உப்பின கோதுமையை (PUFFED WHEAT) அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதையும் மீன் எண்ணெய்யையும் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். பிறகு ரொட்டியைச் சுடவைத்து ஜாமும் வெண்ணெய்யும் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். சில நாட்கள் இதற்குப் பதிலாக பம்பாய் டோஸ்ட் இருக் கும். ரொட்டி ரோஸ்டுடன் முட்டை, பால், தேன் கலந்தது பம்பாய் டோஸ்ட். அமெரிக்காவில் இதற்கு 'பிரெஞ்சு டோஸ்ட்' என்று பெயர். ஓர் உணவு விடுதியில் பூசணி அல்வா என்றும் மற்றொரு உணவு விடுதியில் காசி அல்வா என்றும் சொல்கிறார்கள் அல்லவா, அதுபோலத்தான். அவர்களுக்குக் காப்பி மிகவும் பிடிக்கும். அமெரிக்கர் எல்லோரும் காப்பிதான் குடிப்பார்கள்; டீ அருந்த மாட்டார் கள்.பால், டிக்காக்ஷன், சர்க்கரை ஆகிய ஒவ்வொன்றை யும் தனித்தனியாக வைப்பார்கள். அவரவர்களுக்கு