34 (அமெரிக்க இனம்) என்ற எண்ணத்துடனேயே வாழ் கின்றனர். உரிமை மனப்பான்மை தம் நாட்டின் வளத்தைப் பெருக்குவது, தனிப்பட்ட வரின் சொத்து உரிமை, தாம் தாம் விரும்பிய தொழிலைச் செய்வது, தம் குடும்பத்தைப் பேணுதல், தாம் விரும்பும் அரசியல் முறையை அமைப்பது, தத்தம் கடவுளை வழி படுவது, உலக இன்பங்களைத் துய்ப்பது ஆகியவற்றுக்குத் தங்கள் நாட்டில் முழு உரிமை இருப்பது பற்றி அமெரிக்கர் பெருமைப்படுகிறார்கள். எல்லாக் கிறிஸ்தவர்களும் (God the Father, God the Son, and God the Holy Ghost என்ற) மூன்று கடவுளரிடம் நம்பிக்கை உடையவர்கள். அமெரிக்கர் 'God the Private Enterprise ' தனிப்பட்டவர் தம் விருப்பப் படி அரசினர் இடையூறின்றிப் பொருள் ஈட்டத் தொழில் செய்யும் உரிமை' என்ற கடவுளையும் சேர்த்து நான்கு கடவுளரிடத்தில் நம்பிக்கை உடையவர் என்று கேலியாகச் சொல்லுவதுண்டு! அமெரிக்காவில் அரசினர் நடத்தும் ஒரே தொழில் அஞ்சல் நிலையமேயாகும்; போதிய ஊதியமின்மை யால், இவற்றை நடத்த அமெரிக்க வணிகர் வில்லையாம்! போட்டியிடும் ரயில்கள் முன்வர ரயில்களை அமெரிக்காவில் மொத்தம் 705 குழுக்கள் நடத்துகின்றன . ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு. இரண்டு அல்லது மூன்று குழுக்களின் ரயில்கள் செல்லு கின்றன. ஒவ்வொரு குழுவும் தனித் தனியாகத் தன் செலவில் ரயில் பாதைகளும் ரயில் நிலையங்களும் அமைத்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டு முன்காலத்திய மூன்றாவது வகுப்புக்கு நிகரான 'கோச்சு' என்னும் வகுப்பில்,ஒ
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/35
Appearance