36 வில்லை.தொழிலாளி என்றால் வேலையாள் என்றோ,மதிப்பிற் குறைந்தவர் என்றோ பொருள் இல்லை; ஏனெனில், அமெரிக்கர் வீடுகளில் வேலையாட்களே இல்லை. இயந்திர உதவியோடு ஒவ்வொருவரும் தம் வேலைகளைத் தாமே செய்கின்றனர். ஹோட்டல்களில் பாத்திரம் கழுவுதல், தியேட்டர்களில் டிக்கட் விற்பது விவசாயப் பண்ணைகளில் உதவி செய்வது ஆகிய வேலைகளை மாணவர்கள் விடுமுறை நாட்களிலும், கல்லூரி நாட்களில் ஓய்வு நேரத்திலும் செய்கின் றனர்; இதனால் கிடைக்கும் தத்தம் சொந்த வருவாயின் வாயிலாகவே சிறு செலவுகளை எல்லா மாணவரும் ஈடு செய்கின்றனர்; பெற்றோர் உதவியின்றியே பலர் கல்வி கற்றுவிடுவர். நம் நாட்டில் தாய் தந்தையரைத் துன்பப் படுத்தி, அவர்களிடமிருந்து பணம் பெற்று; அதை வீண் செலவு செய்து, கல்லூரிகளில் கல்வி பெறும் மாணவியர் அமெரிக்க இளைஞர்களிடமிருந்து கொள்ள வேண்டிய பெரிய படிப்பினை இதுவே. மாணவ கற்றுக் வேறு வழிகளில் வருவாய் கிடைத்தபோதிலுங்கூட ஒவ்வோர் அமெரிக்கரும் ஒரு வேலை செய்ய விரும்புகின்ற னர். சான்றாக, காலஞ்சென்ற தலைவர் ரூஸ்வெல்ட்டின் மக்களுள் ஒருவர் சுரங்கத் தொழிலாளியாயும், மற்றொருவர் புத்தகக் கடையில் வேலையாளாகவும் இருப்பதைக் குறிப்பிட லாம். இப்போதைய தலைவர் கார்ட்டரின் தாயார் இந்தியா வில் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்தவர் ஆவார். வேலை செய்வதில் அமெரிக்கர் ஒரு பெருமையை உணர்கின்றனர். அமெரிக்கத் தொழிலாளி பிறரைவிடத் தான் தாழ்ந்த நிலையிலிருப்பதாகக் கருதுவதில்லை; பிறர்மீது பொறாமைப் படுவதுமில்லை. நியூயார்க்கில் டாக்சிக்கார் ஓட்டுபவர்களில் சிலர் தம் பிரயாணிகளுக்கு அன்பளிப்பாகச் சிகரெட்டுத் தருவதும் நிகழ்ச்சி முறை. அமெரிக்காவில் தலைமுடி திருத்துபவர்கள் வாடிக்கைக்காரரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைப்பதும் உண்டு.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/37
தோற்றம்