உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 வாக்காளர் கவனிப்பார்கள். அவள் தம் நாட்டின் முதன்மை வாய்ந்த பெண்ணாயிருக்கத் தகுதியுள்ளவளாக இருக்க வேண்டும்என்பதில் அமெரிக்கர் கண்ணுங் யிருக்கின்றனர். பொது நலப்பணி கருத்துமா அமெரிக்காவில் ஆடவரைக் காட்டிலும் பெண்பால ருக்குச் சமயப்பற்று மிகுதியாக உண்டு. ஞாயிற்றுக்கிழமை யன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறுவர் சிறுமியருக்கு விவிலிய நூல் (Bible) வகுப்பு நடத்தும் பெண்கள் சில ஆயிரம்பேர் உளர்; வேறு விதங்களிலும் சமூக நன்மைக்கான பணிகளில் பல அமெரிக்கப் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஓய்.டபிள்யூ. சீ. ஏ., பெண் சாரணர் (YWCA, Gir Scouts) ஆகிய இயக்கங்கள் உள்பட, பெண்களின் நலத்தைப் பேணப் பல கழகங்கள் அமெரிக்காவெங்கும் உள்ளன. வறுமையாலும் பிணியாலும் வருந்தும் மக்களுக்கு ஆறுதல் அளிக்க இவற்றின் வாயிலாகப் பலவாறான தொண்டுகளை இம்மங்கையர் செய்து வருகின்றனர். குணங்கள் எண்ணம் பிறருக்குப் பயன்பட்டு வாழவேண்டுமென்ற அமெரிக்கப் பெண்டிருக்கு உண்டு. அவர்கள் கூடி வாழும் இயல்புடையவர்கள், இயற்கை வனப்பில் ஈடுபடும் மனப் பண்பும், புன்முறுவல் பூத்த முகமும், நகைச்சுவை போற்றும் நாநலம் போன்ற நல்லியல்புகளும் அவர்களிடம் பொருந்தி யுள்ளன. தாம் பெருஞ் செல்வர் என்ற அகந்தையான மனப்பான்மை அவர்களிடம் காணப்படவில்லை.தோற்றம் எவ்வாறிருப்பினும் அவர்கள் எளிமையான மனத்தரே. அமெரிக்கப் பெண்கள் புதுப்புது மாதிரியான உடைகளில் அவர்களுடைய விருப்ப முடையவர். உடைகள் மிகூ விரைவில் உருமாறுந் தன்மையன.