90 கின்றன.....இதோ 10- ஆவது மாடி: மின்சாரக் கருவிகளும் உணவுப்பொருள்களும் கிடைக்கும்........ அடுத்தது 11-ஆவது மாடி; கண்ணாடிப் பொருள்கள். கட்டிடச் சாமான்கள், மருந்துகள் விற்குமிடம். இதோ 12-ஆவது மாடி: ஆடவருக் கும் பெண்டிருக்கும் ஏற்ற துணிகள் விற்கும் பகுதிகள் இங்குண்டு. முடி அழகு செய்யும் இடமான 13-ஆவது மாடி இதோ" என்று ஒவ்வொரு மாடியைப் பற்றிய விவரங்களை யும் மூச்சு விடக்கூட நேரமின்றி அடுக்கிக்கொண்டே போனான்; அடுத்த மாடி வருவதற்குள் அனைத்தையும் சொல்லிவிடுவதற்காக, அவன் மின்சாரத்தோடு போட்டி யிட்டான். வெற்றிக்குக் காரணம் அமெரிக்காவில் கடைகள் பெரு வெற்றி அடைவதற்கு முதற்காரணம், கடைகள் சொந்தமாக நடத்தப்படாமல் குழுவினரால் நடத்தப்படுவதே. மகன் தகுதியுடையவனா யில்லாவிட்டால், தந்தை இறந்ததும் கடையை மூடிவிட வேண்டுவதில்லை. தக்க பயிற்சி உடையவர்களுடைய தலைமை யில், கடையின் நிர்வாகம் தங்கு தடையின்றித் தொடர்ந்து நடைபெறும். "அமைச்சர்கள் வருவர்; அமைச்சர்கள் போவர்; ஆனால், அரசாட்சி என்றும் நடந்துகொண்டே இருக்கும்" என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. இதைப் போன்றே, அமெரிக்காவில் கடை முதலாளிகள் இருப்பர்! கடை முதலாளிகள் இறப்பர்; ஆனால் கடை அழியாமல் என்றும் பதினாறாக வாழும். மட்டும் பல தலைமுறைகளுக்கு ஒரு கடையின் பெயரை மக்கள் கேள்விப்படுவதால், அந்தப் பெயரைச் சொன்ன அளவில், கடைக்குச் சாதகமான ஒரு தனிப்பட்ட அபிப்பிராயம் உருவாகிவிடுகிறது. இதனால், விளம்பரங்களைப் படித்து அவற்றைக் கத்திரித்துத் தபாலில் அனுப்பிப் பொருள்கள் வாங்குவோர் அமெரிக்காவில் பல கோடிப்பேர் உளர். தொலைபேசியில் ஒரு கடையைக் கூப்பிட்டு '"90 சதம் பஞ்சு
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/91
தோற்றம்