93 கடையில் அவள் வேலை செய்வதாக அங்கிருந்தவர் வாயிலாக அறிந்து, உடனே அந்தக் கடைக்குச் சென்றேன். அங்கு அவளைச் சந்தித்தபோது, இரண்டொரு சொற்களை மட்டும் என்னிடம் கூறிவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அவள் மீண்டும் தன் வேலைக்குச் சென்று விட்டாள். பெரும் ஏமாற்றத்துடன் நான் விடை பெற்றேன்; மறுநாள் அவளே என்னை வந்து சந்தித்துத் தன் தந்தையிடமிருந்து சில நாட் களுக்கு முன் என்னைப் பற்றி ஒரு கடிதம் வந்ததாகத் தெரி வித்தாள். அதுவன்றோ கடமை யுணர்ச்சி! தான் வேலை செய்யும் கடையில் வேலையாட்களுக்கு நூல் நிலையமும் உடற்பயிற்சிச் சாலையும் இருப்பதாகவும், 'பிரிட்ஜ்' (Bridge) என்னும் சீட்டாட்டம் பற்றி அவர்களு டைய கழகத்தில் மாதமிருமுறை சொற்பெருக்குகள் நடை பெறுவதாகவும், துப்பாக்கியால் சுடப் பழகுபவருக்கும், புகைப்படம் எடுப்பவர்களுக்கும் அக்கடையிலேயே தனித் தனிக் கழகங்கள் இருப்பதாகவும், முதல் சிகிச்சை கூட அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகவும், அந்தப் பெண் சொன்னாள். கடையைப் பற்றிய வாரப்பத்திரிகை அச்சிட்டு வழங்கப்படுகிறதாம். அவர்களுக்காக ஒரு பேங்கும் இருக் கிறதாம். கடையில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டுமென்ற யோசனையையும் வேலையாட்கள் மாதந் தோறும் தெரிவிக்க வேண்டுமாம். அவள் சொன்ன சுவை யான செய்திகளில், மேலும் சிலவற்றைக் கூறுவேன்:- மழை பெய்தால் வேலையாட்களுக்குக் குடைகள் கொடுக்கவும் ஒரு பகுதி இருக்கிறது. உரிய கட்டணம் கட்டிக் குடையைப் பெற்றுக் கொண்டு போய், மீண்டும் குடையைக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தத்தம் பொருள்களை வைத்துக் கொள்ள ஒவ் வொரு வேலையாளுக்கும் ஒரு சிறு அலமாரி கொடுக்கப் பட்டிருக்கிறது. வேலைக்கு வரும் வழியில் காய்கறிகளை வேலைக்காரர்கள் வாங்கியிருந்தால், மாலையில் அவர்கள் அவற்றை வீட்டிற்குக் கொண்டுபோவதற்குள் அவை வாடி
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/94
தோற்றம்