பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

திலே வைக்கப்பட்டிருக்கும். ஆங்கில அமெரிக்கச் சட்டம், இலத்தீன் அமெரிக்கச் சட்டம், அயல்நாட்டுச் சட்டம் ஆகியவற்றைப் படிக்கத்தனிப்பட்ட உதவி அளிக்கப்படுகின்றது.

பிற தனிப்படிப்பகங்கள்

பொதுப்படிப்பகங்கள், சட்ட நூலகப்படிப்பகங்கள் தவிர, பிற தனிப்படிப்பகங்கள் நடைபெறுகின்றன.

1. நாடோடிப்பாடல் படிப்பகம்.

2. அரசினர் வெளியீட்டுப் படிப்பகம்.

3. கையெழுத்து நூற் படிப்பகம்.

4. படப்படிப்பகம்.

5. இசைப் படிப்பகம்.

இவை தவிர, காங்கிரசுப்படிப்பகம், தலை நகரில் உள்ள சட்ட நூலகம், குருடர் படிப்பகம் என்பனவும் உள.

அமெரிக்க வரலாறும் பரம்பரை வரலாறும்

இந்த இருதுறைகளிலும் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்க்காகப் பலவித சிறந்த நூல்கள், வெளியீடுகள், பட்டியல்கள் முதலியவை செபர்சன் படிப்பகத்திலே வைக்கப்பட்டுள்ளன. இவை இங்கு வைத்து மட்டுமே பயன்படுத்தப்படும்.

தேய நூற் பட்டியலும் தனிநூற் பட்டியலும்

தேய நூற்பட்டியல் காங்கிரசு நூலகம் பிற ஆராய்ச்சி நூலகங்கள் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியால் உருவனதாகும். இதிலே 1,50,00,000 நூற்பெயர்கள் அடங்கியுள்ளன. கானடா, அமெரிக்கா ஆகிய