பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

திரு. திருமலை முத்துசுவாமி. நூலக இயக்கத்தைப்பற்றி அவர் எழுதியுள்ள நூல்களின் வரிசையில் இந்நூல் ஐந்தாவதாகும். இவ்வரிசையில் இன்னும் பல நூல்களை அவ்வாறு எழுதத் திட்டமிட்டுள்ளார். இந் நூலைப் படிப்போர் அமெரிக்க நாட்டின் நூல் நிலைய வளர்ச்சிக்குப் பொதுமக்களின் ஆதரவே பெருமளவு காரணமாக இருப்பதை நன்கு உணர்வர். அரசியலாரின் உதவி அதனைப்பொறுத்தே இருக்கிறது என்பதும் தெளிவுபடும். இது நம் நாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நூலக வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள ஒவ்வொரு வருட படிக்கவேண்டிய சிறந்ததொரு நூலாகும் "அமெரிக்க நூலகங்கள் கலையியல்பற்றி மேலும் பல நூல்களை வெளியிட நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றுள்ள இந் நூலாசிரியருக்கு எல்ல நலங்களும் அருள இறைவனை இறைஞ்சுகின்றேன்.

K. M. சிவராமன்
செயலாளர்,
சென்னை புத்தகாலய சங்கம்

சென்னை
6.8.61