பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை 225


(2) "இன்றுமுழு நிலா நாளாம் எங்கே யுள்ளீர்?
எங்ஙனம்யான் உமையடைவேன் இயம்பு வீரோ?
சென்றமுழு நிலா நாளில் சேர்ந்திருந்தோம்
சென்றிடுவீர் எனைவிட்டெனச் சிறிதும் தேரேன்
அன்றுசொன்னீர் நாம்பிரிந்திட் டகல மாட்டோம்
அன்றில்போல் இணைபிரியா தணைவோம் என்றே!
ஒன்றிய நல் லுயிர்பிரிந்த உடல தானேன்
ஒருபிறவி யிலுமெனக்கே உய்வே யில்லை."

(3) "கோவலனைக் கண்ணகியைக் குறிப்பிட் டொப்பு
கூறிட்டீர் உடனேயான் குறுக்கிட் டுரைத்தேன்:

310 கோவலனும் கண்ணகியும் குறையக வையிலே
கூற்றுவனால் கொலப்பட்டுக் கூடா தொழிந்தார்.
நாவதனால் அவர்தம்மை நமக்கொப் பாக
நவிலவேண்டா என்றுமக்கு நன்கு சொன்னேன்;
காவதனில் பேசிட்ட காட்சி என்றன்
கண்முன்னே நின்றிடவே கலங்கு கின்றேன்."

(4) "அந்தமுழு நிலா நாளில் ஆருயிர்த் தந்தை
அருபறம்பு மலையினிலே அமர்ந்தி ருந்தார்
இந்தமுழு நிலா நாளில் எந்தையும் மலையும்
இழந்துவிட்டோம் என்செய்வோம் என்று கூறி
315 நொந்தபாரி மகளிர்கதை நுணுகித் தேர்ந்து
நுவன்றிட்டீர் அப்போதே நொந்து கொண்டேன்
இந்தவரு மகளிர்போல் எனது வாழ்வும்
இன்னலுக்குள் ளாகிடுமோ என்றை யுற்றே."

(5) "அடுத்தமுழு நிலா நாளில் அரண்மனை விட்டே
அகன்றிடுவாய் ஐயமில்லை; அதற்குப் பின்பியான்
அடுத்திடுநல் லிடம் நீயும் அடைவா யென்றே
அன்றங்கே என்னிடம்நீர் அறைந்த போது


305 முழுநிலா நாள் - பௌர்ணமி நாள். 306. தேரேன் - அறியேன். 310. குறை அகவை - குறை வயது. 312. காவதனில் - சோலையில். 316.இன்னல் - துன்பம்.318. அன்று அங்கே - அன்றிரவு அச்சோலையில்.


அ - 15