பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அம்புலிப் பயணம்

படியே சந்திரனுக்கு 112 கி.மீ. உயரத்தில் "கொலம்பியாவில்“ (தாய்க்கலத்தின் பெயர்) அதனைச் சுற்றி வந்து கொண்டிருந்தவர். இவர் மூலமாகவே பூமியிலிருந்த அறிவியலறிஞர்கள் சந்திரனில் இறங்கின இருவருடனும் தொடர்பு கொண்டனர். நோடியாகத் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு இருந்தது. ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்டிரினும் சந்திரனில் தம் கடமைகளை முடித்துக் கொண்டு மீண்டும் "கழுகில்“ (அம்புலி ஊர்தியின் பெயர்) ஏறிமேலே கிளம்பித் தாய்க்கலத்துடன் இணையும்போது ஏதேனும் சிரமம் அவர்கட்கு ஏற்பட்டால் கொலம்பியாவைத் திறனுடன் இயக்கி இரு கலங்களையும் ஒன்றாக இணையச் செய்யும் முக்கியப் பொறுப்பு காலின்ஸுக்கு இருந்தது. இத்தகைய அநுபவத்தை நன்கு பெற்றிருந்தார் இவர். ஜெமினி-10 பயணத்தில் இவர் ஆற்றிய செயற்கரிய சாதனைகளை நாம் அறிவோம்.

அப்போலோ-8 பயணத்தின்போதே காலின்ஸ் அம்புலி மண்டலத்தைச் சுற்றி வந்திருக்க வேண்டியவர். அப்போது அவர் முதுகெலும்பில் ஏற்பட்ட நோயின் காரணமாக மருத்துவம் பெறவேண்டியிருந்ததனால் வேறு ஒருவர் அவருக்குப் பதிலாகச் சென்றார், அப்போது காலின்ஸுக்குக் கிடைக்காத பெருமை இப்போது கிடைத்தது.

இந்தப் பயணத்தில் பங்குபெற்ற மூவரிடமும் சில ஒற்றுமைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மூவரும் 1930 இல் பிறந்தவர்கள் ! மூவரும் 75 கி. கி. எடையை யுடையவர்கள் ! இருவரின் உயரம் 178 சென்டி மீட்டர் மற்றொருவரின் உயரம் 175 செ. மீட்டர் ! மூவரும் திருமணம் ஆகி மக்கட்பேறு பெற்றவர்கள் மூவரும் விமானம் கடவுவதில் நல்ல அனுபவம் உடையவர்கள் ; நாலாயிரம் மணி நேரத்திற்குக் குறையாமல் விண்வெளியில் பறந்த வர்கன். மூவருமே முன்பு நடைபெற்ற விண்வெளிப் பயணங்களின்போது ஒவ்வொரு முறை பங்குபெற்றவர்கள்.

சட்டர்ன்-5 என்ற மாபெரும் இராக்கெட்டே இந்த அப்போலோ -11 பயணத்திலும் பயன்படுத்தபெற்றது. இதன் அமைப்பைப்பற்றி நாம் நன்கு அறிவோம். இதன்