உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மேலே வந்துவிட்டது! அலைகளின் நடுவில் சிறு ஓடம் எப்படித் தத்தளிக்கிறது !

ஸெப்பி: அதோ பட்டாளம் வருகிறது எத்தனை குதிரைகள்

குவோனி: ஆமாம்! நல்ல வேளை, தக்க சமயத்தில் டெல் படகை நகர்த்திவிட்டான்!

[குதிரைகள்மீது சிப்பாய்கள் வருகின்றனர்.]


முதல் சிப்பாய் : கொலைகாரனை ஒப்படையுங்கள்! நீங்கள் தான் அவனை இங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள்; சந்தேகமில்லை!

இரண்டாவது சிப்பாய் : இந்த வழியாகத்தான் அவன் வந்தான்; எங்களை நீங்கள் ஏமாற்ற முடியாது !

குவோனியும் ருவோடியும் : யாரைத் தேடுகிறீர்கள்?

முதல் சிப்பாய் : (ஏரியில் செல்லும் ஒடத்தைக் கண்டு) ஆகா! பறவை தப்பி ஓடிவிட்டதே! எல்லாம் நாசமாய்ப் போச்சு!

வெர்னி : (பாறை உச்சியிலிருந்து) அந்த ஒடத்திலிருப்பவன் தான் நீங்கள் தேடுகிற ஆசாமியோ? குதிரைகளை விரட்டுங்கள்! அவனைப் பிடித்துவிடலாம்!

இரண்டாவது சிப்பாய் : சண்டாளப் பயல் ! தப்பிவிட்டானே!

முதல் சிப்பாய் : (குவோனியிடம்) நீங்களெல்லாம் அவனுக்கு உதவி செய்திருக்கிறீர்கள்! உங்களைப் பழி வாங்காமல் விட மாட்டோம்! (மற்ற சிப்பாய்களிடம்) சிப்பாய்களே, இவர்களுடைய குடிசைகளை அழியுங்கள் ! தீ வைத்துக் கொளுத்துங்கள்! ஆடுமாடுகளை அடித்து நொறுக்குங்கள் ! எல்லாம் ஒழியட்டும்!

[சிப்பாய்கள் முன்னால் பாய்ந்து செல்கிறார்கள்.]


ஸெப்பி : (அவர்களைத் தொடர்ந்து ஓடிக்கொண்டே) ஐயோ, என் அருமை ஆட்டுக் குட்டிகள்-

குவோனி : (தொடர்ந்து ஒடிக்கொண்டே) ஓ, என் பசுக்களின் கதி என்ன?

வெர்னி : இது அசுரர்களின் கொடுங்கோல் !