உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காதலாம் காதல்; கேளம்மா கொஞ்சம் தயவு செய்து. கடன் பட்ட குடும்பம் நம்முடையது. அது மட்டுமல்ல. கடமையும் பட்டிருக்கிறேன் இளவரசருக்கு - தேவை யான போதெல்லால் எனக்குப் பொருள் கொடுத்திருக் கிறார் - நானும் கைநீட்டி வாங்கியிருக்கிறேன் - அன்றைக்குக் கூட திருமண முன் செலவுக்காக சிறு பொன் கொடுத்தி ருக்கிறார். [பெட்டியைக் காட்டி] முத்தாயி: அப்பா! பொருளுக்காக என் வாழ்வு பாழாகி கி விடுவதா? வாழ்வுக்கேற்றவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்குக் கிடையாதா அப்பா? திரிசங்கு: உன் வாழ்வுக்கேற்றவனைத்தான் மாட மாளிகை, கூடகோபுரத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறேன். இரும்புப் பெட்டியே நம்மை நாடி வருகிறது - நீ திருவோட் டைத் தேடி ஓடுகிறாய், முத்தாயி: அப்பா! சுதந்திரமாக வளர்ந்த என்னை பாளையக்காரரின் சொத்துக்களைப் பிடிக்கும் சூதாட்டக் காரியாக; உங்கள் கடனை அடைக்கும் அடமானப் பொரு ளாக ஆக்கிவிடாதீர்கள் அப்பா. திருசங்கு: போதும் முத்தாயி போதும்-நீ அந்த அன்னக காவடிக்கு மாலையிட என் உயிர் உள்ளவரை சம்மதிக்க மாட்டேன். நீ மறுத்தால் என் பிரேத ஊர்வலம் போன பிறகுதான் உங்கள் கல்யாண ஊர்வலம் போக முடி யும். ஆமாம்! ஞாபகம் வைத்துக் கொள். R அஞ்சல் மனை (முத்தனும்,நண்பர்களும் இருக்கிறார்கள் ] - முத்தன்: ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - இன்று; நான் நாளை நீங்கள்; இப்படி வயிற்றில் அடிக்கப் படலாம். நண்பன்: இதற்கு வேறு என்னதான் வழி...? முத்தன்: நாமெல்லாம் அடிமைகளாய் இருக்கும் வரையில் நாளுக்கு ஒரு அதிகாரம் ஆளுக்கு ஒரு நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/34&oldid=1700446" இலிருந்து மீள்விக்கப்பட்டது