உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 முத்தாயி: வரும் வரையில்தான் குளித்துக் கொண் டிரேன்... வெல்லத்தாலா செய்திருக்கிறது உன் உடம்பு... தண்ணீரில் கரைந்துவிட சுமதி : என் உடம்பு வெல்லமல்ல... இப்போதுவந்து வர்ணிப்பார் பார்... அப்போது தெரியும் யார் உடம்பு வெல்லமென்று (ஆண்போல) கற்கண்டே! தேனே! காய்ச்சிய பாலே! முத்தாயி: போடி வாயாடி. (கையை ஓங்குதல். சுமதி ஓடிவிடல். முத்தன் வருதல் முகவாட்டத்துடன்] முத்தாயி: ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? இதை சாப்பிடுங்கள். முத்தன்: வேண்டாம். முத்தாயி: ஓ! இரண்டு நாட்களாக வரவில்லையே - நான் கோபித்துக் கொள்வேன் என்று முந்திக் கொள்கிறீர் களா? எனக்கொன்றும் கோபமில்லை. கையிலே இருக்கும் மை எழுதும் கோல் புருவத்துக்கருகே வந்துவிட்டால் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுமாம். அதுமாதிரி நீங்கள் என்னருகே வந்துவிட்டதும் நீங்கள் செய்த தவறெல்லாம் எனக்கு மறைந்து விடுகிறது. முத்தன்: முத்தாயி! இரண்டு நாள் வராததற்கே இப்படி வருந்துகிறாயே-நாம் சந்திக்கவே முடியாத அந்த இருண்ட நாட்களை நினைக்கவே பயமாக இருக்கிறது.

என்ன... என்ன சொல்கிறீர்கள்?

முத்தாயி முத்தன் என் சோலைக் குயிலே! நீ கூவமுடியாத பாலைவனமாகிவிட்டேன் நான். முத்தாயி: நீங்கள் பாலைவனமானால் நான் அதிலே வளரும் பேரீச்ச மரம்.

முத்தன்: விளையாடாதே முத்தாயி விளையாடாதே.. விண்மீனைப்போல் கண்சிமிட்டி, வெள்ளி முத்துப் பல் காட்டி, அள்ளிவரும் புள்ளி மயில் சாயல் காட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/45&oldid=1700457" இலிருந்து மீள்விக்கப்பட்டது