உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் - 54 நடக்க நாடு - எனக்குத் தேன்கூடு-நீரோ தீக்காடு-- சாக்காடு வரினும் சரியென்பேனே தவிர, பூக்காட்டில் புகுந்துவிட்ட புயலாம் உன்பின்னால் நான் மாட்டேன்! சுந்தர பூமியின் பிரஜை நான் - அதைச் சுரண்டி வாழும் பிரபு நீர்; புத்தி சுவாதீன மற்றவனும் கூட ஒத்துக் கொள்ள மாட்டான், புலியைத் தொடர்ந்து மான் நடக்கலாம் என்ற உமது புதிய திட்டத்தை - தத்துவத்தை! வீர வேல : பேசாதே... யாரங்கே! இந்த வீராதி னுக்கு விலங்கிடுங்கள்! நமது அணிதேர்ப்புரவி, ஆட்பெரும் படை முன்னே செல்லட்டும் - இந்த அடிமை நாயும் பின்னே இழுத்து வரப்படட்டும். முத் என்ன? வேல : உம்... உடனே... [முத்தனுக்கு விலங்கிடப்படுகிறது] பழுதூர் வீதி [வேலழகனும் வேதாளமும் ஒரு ஒரு ரத வண்டியில் செல்லும்போது முத்தாயியை பார்த்து விடுகின் றனர்.] வேலழகன் : குறும்பா!... வேதா: நிறுத்து! [ரதம் நிற்கிறது] வேதா : பிரபூ! அதோ;... அந்தப் பொன் வாத்து தான் நான் கூறிய முத்தாயி!... வேல : ஆகா!... பொன் வாத்து என்று கூறுகி றீரே... புலவர் மொழியிலே அன்னம் என்று கூறும்:... சொர்ணம் என்று சொல்லும், வேதாளம்-இவளை நான் எப்படியும் அடையவேண்டும்... நானும் முத்தாயியும் விரைவில் காதல் கீதம் பாடவேண்டும்! வேதா : கவலையை விடுங்கள்... உங்கன் கீதத்துக்கு நான் தான் தாளம்! [ரதம் போகிறது. பின்னால் முத்தன். இழுத்துவரப் படுகிறான்]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/56&oldid=1700468" இலிருந்து மீள்விக்கப்பட்டது