உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வீங்கிய தோளும், விடுதலை வாளும் கொண்டு, ஓங்கிய கைபைத் தாழ்த்தாமல், ஒழிந்திடுவோம் எனத் தெரிந் திடினும் ஒளி சிந்தும் விழியில் ஒருதுளி பயமும் படாமல், 'இன்பமணம் பெறத் திரும்பவும் கூடும்-அல்லது எந்தன் பிணம் அந்தக் களத்திலே நாறும்', என்ற மொழி யுரைத்து. எதிரியை வெல்லப் பழியுரைத்து - படை யினர்க்கு வழியுரைத்துக் கிளம்பிய எத்தனை எத்தனை விடுதலைக் குமரன்கள்..... சுதந்திர அன்னையின் மடியிலே சமாதிக் குழந்தைகளாய் -கல்லறை செல்வங்களாய்- தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அந்த வீரத் தியாகிகள் ஏற்றிருக்கும் தழும்புகளை நினைத்தால், என் தங்கமே; இந்தத் தண்டனை மிகக் முறைவு!... [வேலழகன் வருகிறான்.) வேல : என்னடா இங்கே...யார் இந்த நிலாப் பதுமை? யாரம்மா நீ?... முத்தான்; துரோகி... தொடாதே! வேல : ஏன், இந்தத் தோகை மயிலுக்கு நீ தான் சொந்தக்கரானோ?.. முத்தன்: வெறியனே!... தெரியாத பண்பற்ற மிருகமே!... பெண்களிடம் பழகத் வேல் : என்ன? (அறைகிறான்) - முத்தாயி? தான்!... அத் முத்தன்: காதலும் கடமையும் ஒன்றாக பின்னிக் கிடக்கும் எங்கள் ஆனந்த வாழ்விலே குறுக்கிட்ட கண்ய மற்றவனே!... கட்டுண்டு கிடப்பவனை அடித்து மகிழும் வீராதி வீரனே!... [சிரிக்கிறார்கள்] சிரியுங்கள்!... சிரியுங்கள்!... நன்றாகச் சிரியுங்கள்!... உரக்க உரக்கச் சிரியுங்கள்!... சித்திரச் சோலையிலே சிலந்திவலை பின்னிவிட்ட வேலழகன் கும்பலே... வீணர்களின் கூட்டமே... நன்றாகச் சிரியுங்கள்!...ஹ...ஹ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/58&oldid=1700470" இலிருந்து மீள்விக்கப்பட்டது