உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வீரன்: அண்ணே! உன் தலைமையில் பணி புரிய இந் தத் தம்பி எப்போதும் தயார்... வீரர்கள் : தயார். 6 நான் தயார்.. நானும் தயார். நானும் தயார்... (வேலழகன் சிரித்தபடி வருகிறான்) வேல: எல்லோரும் தயார்... ஆனால் நான் தான் தயார் இல்லை... விடுதலை வீரர்களாகிய உங்களை வெளியில் விட !...ஏ? அடிமைநாயே! மலைப்பாம்பின் வாயில் இருந்து கொண்டு விடுதலை மகுடியா ஊதுகிறாய்?... அதன் வயிற் றுக்குள்ளேயே உன்னைப் போட்டு விடுகிறேன்... பார்... இதோ தெரிகிறதாடா உன்னைச் சித்திரவதை செய்யப் போகும் சிறைச்சாலை... ய முத்: சிறைச்சாலை!... புரட்சிக் கவிதை புரியாதே உமக்கு!... அறிவீர்... மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை... எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை... வேல் : எதிர்த்துப் பேசாதே...மூடு வாயை!..... [இழுத்து உள்ளே தள்ளுகிறான்,) பழுதூர் வாழும் பூச்சிகளே! புழுக்களே!... புலியை இடறாதீர்கள்-ஜாக்ரதை ;... 'இம்' என்றால் சிறைவாசம்; 'ஏன்' என்றால் வனவாசம்! [வேகமாகப் போகிறான்.) கண்ணடி மாளிகை (வேதாளம் சுகதேவ்) சுகதேவ்: வேதாளம்! நீர் சொன்னபடி எல்லா ஏற் பாடுகளையும் செய்து முடித்து விட்டேன். இரண்டாயிரம் பொன் சில வழித்து ... ஆபரணம் ... ஆடை அது... இது.... எல்லாம் வாங்கி விட்டேன்... என் முத்தாயி வந்து விடு வாளா?...வேதாளம்... என் கண்ணாட்டிக்காக இந்த கண் மாளிகை காத்துக் கிடக்கிறதே...வருவாளா அந்த ணாடி ஆரணங்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/66&oldid=1700478" இலிருந்து மீள்விக்கப்பட்டது