உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பலதேவர் மாளிகை பலதேவர் : திரிசங்கு! வரட்டும் அவன்! நல்லவனைப் போல நடந்து நரிவேலை நடத்தி இருக்கிறானே, துரோகி! வேதாளம் : நல்லவர்களை இந்தக் காலத்தில் நம்பக் கூடாது பிரபு. பல : யாரங்கே? (சேவகன் வருகிறான்) உடனே போய் திரிசங்குவை கை கால்களைக் கட்டி. இழுத்து வாருங் கள். எவ்வளவு பொருள் அழிந்தாலும் சரி-என் மகனை என்னிடம் அழைத்து வந்தால்போதும். அவன் வராவிட் டால் ராணி இறந்தே விடுவாள்.

வேதா : சுகதேவ் காணாமற்போன செய்தி யாருக் கும் தெரியவேண்டாம். நானே அவரைத் தந்திரமாக கண்டுபிடித்து வந்து தங்களிடம் ஒப்படைக்கிறேன். பல : மிகவும் நன்றி.ஐநூறு பொன் தருகிறேன்- சுகதேவ் கிடைத்துவிட்டால் உமக்கு பரிசாக ஐநூறு பொன் தருகிறேன் இரும்-வருகிறேன். பலதேவர் போகிறார்) வேதா : துன்பம் துணை யோடு வரும், இன்பம், தனியாக வரும் என்பார்களே, அது தவறு ! வேதாளத்தின் மீது இன்பம் எறும்பு வரிசைபோல் அல்லவா படை எடுக் கிறது! உம் ... ஒ ரு வனை அடித்துத்தான் ஒருவன் சுகம் தேடமுடிகிறது! சிலந்திக்கு ஆகாரம்— சிலந்தி பல்லிக்கு ஆகாரம்-பல்லி பூனைக்கு ஆகாரம் - பூனை குறவனுக்கு ஆகாரம்--குறவன் எமனுக்கு ஆகாரம்-அதே வழிதான் என் வழியும்! வேகமாகப் போகும் என் வளர் சி ஒருவேளை என்னை பழுதூர் பாளையக்காரராகக்கூட ஆக்கி விடலாம்!... பல : (உள்ளிருந்து வந்து) வேதாளம்! இந்தாரும்! வேதா : பெருமை மிகு பிரபுவே! உங்கள் அருமை மிகு மகனை எப்படியும் அழைத்து வருகிறேன். ஆண்ட வனே துணை! அம்மையப்பா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/82&oldid=1700495" இலிருந்து மீள்விக்கப்பட்டது