பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அம்மையும் அப்பனும் 'அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு' என்றும், 'அறிவினுள் எல்லாம் தலை என்ப" திய செறுவார்க்கும் செய்யா விடல்' என்றும், 'அருள் என்னும் அன்பீன் குழவி என்றும், சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை' - என்றும் இன்னும் பலவாகவும் வள்ளுவர். இம்மனிதப் பண்பினைக் காட்டுகின்றார் எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே' என்று மற்றொரு புலவர் கூறுவர். சீத்தலைச் சாத்தனார், 'கொலையே களவே காமத் தீவிழை உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று உள்ளந் தன்னில் உதிப்பன மூன்றும்' பத்துக் குற்றம் எனக்கூறி மனமொழி மெய்களால் வரும் குற்றங்களை நீக்கியவனே மனிதன் எனக் காட்டி யுள்ளார். சிறந்த ஆங்கிலக் கவிஞனாகிய ரட்யாட் $Lastiš' ciertuaià (Rudyard kipling 1865-1936) ‘It' என்றே ஒரு பாடல் அமைத்து, அதில் மனித குணங்களை