பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i22 அப்பனும் ஆவி அங்கு ஏக இந்த ஆகம் இங்கு இருப்பதேயோ பாவியோ மேனாள் இந்தப் பறழினை வகுத்த தெய்வம் மா அமராடி வென்று வருதியேல் வருவன்; அன்றி நீ விளித் திடத்து மாய்வன் நிழலுக்கும் செயல் வேறு உண்டோ? (25) இந்த இரு பன்றிகளின் குழந்தைகளே அந்தப் பன்றிக் குட்டிகளும். தலைவனாகிய பன்றி தான் போர் மேல் செல்லுவதாகவும், தலைவியாகிய பெண் பன்றியை அங்கே வீட்டில் தங்கி, குழந்தைகளைக் காத்துக் கொண் டிருக்குமாறும் கூறுகின்றது. ஆயினும் கணவனது உடலின் நிழல் போல் எங்கும் தொடரும் மனைவி, அந்த உடலை விட்டு நிழல் பிரியாதிருக்கும் நிலையில் தானும் உடன் வரும் நிலையினை 'நிழலுக்கும் செயல் வேறு உண்டோ என்ற உவமையால் விளக்குகின்றார். மேலும் தலைவனை உயிராக்கித் தன்னை உடலாக்கி இரு நிலை யிலும் பிரியாது வாழ்வதும் முடிவு நேர்ந்தால் இருவரும் மாள்வதுமே வாழ்க்கைத் துணை நலத்தின் சிறப்பத னையும் வென்று வருதியேல் வருவன், அன்றி நீவிளிந் திடத்து மாய்வன்' எனப் பெண் பன்றி கூறியதாகக் கூறுகின்றார். பரஞ்சோதியார். இந்த உணர்வு இன்றைய மனித ஆன்மாக்களிடம் இருக்குமானால் உலகம் எவ்வளவு சிறப்புடன் வாழும். நாம் மேலே செல்வோம். சென்ற பன்றிகள் இரண்டும் போரிடை மாய்கின்றன குட்டிகள் பன்னிரண்டும் தாயற்று, தந்தையற்று அலறித் துடிக்கின்றன. எல்லயிராயினும் அவ்வுயிர் வருந்தும் நிலை கண்டு அம்மை அப்பன் வாளா இருப்பனோ! கொடிய மாபாதகத்தைச் செய்தவனையே வாழவைத்