பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


(49) கிழ்ச்சியால் சாவதே மேல்அமெரிக்க நடிகர் வில்லியம் கில்லெட் இளவயதில் ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம், அவர் நடிக்கும் நாடகத்தில், மரணம் அடையும் பாத்திரத்தின் ஒரு காட்சி! அந்தக் காட்சியில் கில்லெட் நடித்த முறையானது நாடகக் குழு நிர்வாகிக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர்,

"என்ன ஐயா, மரணம் அடையப் போகிறவராக நடிக்கின்ற நீங்கள், அந்தச் சமயத்தில் சிரித்துத் தொலைக்கிறீர்களே சுத்த மோசம்” என்று சீறி விழுந்தார்.

அதற்கு, "நீங்கள் கொடுக்கும் சம்பளத்தைப் பார்த்தால், அதை வாங்கிப்பிழைப்பதைக் காட்டிலும் இப்படி மகிழ்ச்சியாகச் சாவதே மேல் இல்லையா?” என்று சுடச்சுடப்பதில் அளித்தார் நடிகர்.(50) திருமணத்தை றந்தவர்


திருமண நாள்! அழகான ஆடை அலங்காத்தோடு மணமகள் காட்சி அளித்தாள்.

உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோர் ஆலயத்தில் வந்து குழுமியிருந்தனர்.

ஆனால், மணமகனைக் காணவில்லை.