பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
63
 


"அம்மாடியோ, மூன்று மாதங்களாக, அதை இவ்வளவு பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, எப்படி?” என்று வியப்போடு கேட்டாள் சிறுமி.(68) டிக்கும் ர்வம்பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி மிக அதிகமாகப் படிப்பார். ஒரு நாளில் 16 மணி நேரம் கூடப் படிப்பார்.

நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் பல வித தொல்லைகளோடு வாசித்து முடிப்பார்.

பெர்னார்ட்ஷாவும் அப்படியேதான்!(69) சையா? மொழியா?


நேபாளத்து மன்னர் ராணா 1853ல் இங்கிலாந்துக்குப் போயிருந்தார்.

விக்டோரியா மகாராணி, ராணாவை வரவேற்பதற்காக ஒரு பால்டான்ஸை ஏற்பாடு செய்திருந்தார் ராணியும் கூட அதில் கலந்து கொண்டார்.

நடனம் முடிந்ததும் ராணாவிடம் மொழி பெயர்ப்பாளர் மூலமாக, "நடனம் எப்படி இருந்தது?" எனக் கேட்டார் ராணி.