உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 491

ஆட்கொல்லி வித்தையாச்சுதே அது உதவாது, உதவாதென்றே இகழ்ச்சிபடுத்துவார்கள். ஆதலால் இத்தேசமக்கள் இகழ்ச்சி வித்தைகளைக் கற்காது புகழ்ச்சி வித்தைகளைக் கற்பதும் கையாளுவதுமே அழகாம்.

- 7:18: அக்டோபர் 8. 1913 -


305. சுயராஜாங்க விவரம்

சுயராஜாங்க விவரமாயது யாதெனில் தற்காலம் நமது கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் தங்களது புஜபல பராக்கிரமத்தாலும் விவேக விருத்தியாலும் ஒற்றுமெயினாலும் அனந்தராட்சியங்களைக் கைப்பற்றி அரசுபுரிந்து வருகின்றார்கள் அவைகளுள் சில தேசத்தார் முயன்று பிரிட்டிஷ் அரசாட்சியே மேலாயதாயினும் தங்கள் ராட்சிய பாரத்தைத் தாங்களே தாங்கிக்கொண்டு ஏதோ ஓர் வரியிறையோ, கப்பமோ, சுங்கமோ தங்களால் தருவதாக முயன்று சுயராட்சியங் கேட்டு வருகின்றார்கள். அவ்வகைக் கேட்போர்களும் சுயராட்சியம் பெற்றுள்ளோர்களும் எத்தகையோர்கள் என்னில் கொள்வினை கொடுப்பினையிலும், உண்பனை தின்பனையிலும் பேதமற்ற ஒரே சாதியினரும் ஒரே பாஷையினரும், ஒரே மதத்தினருமாவர்.

இத்தகைய சாதியோரை மேற்கொள்ளுமாறு வேறு சத்துருக்கள் எழுவிய போதினும் தங்களுக்குள்ள வல்லப மிகுதியாலும் புத்தியின் கூர்மையாலும் தங்களாலியன்றவரை போர்புரிந்து இயலாத காலத்து பிரிட்டிஷ் ஆட்சியின் உதவியைத் தேடிக்கொள்ளுவார்கள். அவர்களுக்குள் தேசத்தையும் தேச மக்களையுங் கெடுத்து ஒருவரைக் கண்டால் ஒருவர் சீறும் ஒற்றுமெக் கேடாய சாதிபேத வக்கிரமச் செயல் அவர்களுக்குக் கிடையாது. சோம்பேரி சீவன மதக்கடை பரப்பி என்சாமி பெரிது உன்சாமி சிறிதென்னுஞ் சண்டையிட்டு வித்தியா விருத்திக் கேடாய மதபேத மதியிலிருப்போர் கிடையாது. வித்தையையும் புத்தியையும் மேலாகக் கருதி அதே ஊக்கமுற்றிருப்பவர்களாதலின் கொடுத்துள்ள சுயவரசாட்சியை செவ்வனே நடத்தி சீர்பெற்றிருப்பதுடன் இனி சுயராட்சிய பாரந்தாங்கிக் கொள்ளப் போகின்றவர்களும் அவ்வகையே நடந்து சீர்பெற்றுப் போவார்கள் என்பதும் திண்ணம்.

அவைபோல் நமது இந்திய தேயவாசிகள் சுயராட்சியம் நடாத்த அருகராவார்களோ என்பதை ஆலோசிப்போமாக.

இத்தேசவாசிகளில் இந்தியர்களென்றும், இந்துக்களென்றும், மகமதியர்களென்றும், கிறிஸ்தவர்களென்றும் நான்கு வகுப்போருண்டு. இவர்களுள் இந்தியரென்போர்களே பூர்வக் குடிகளாவர். அதாவது இந்திரரென்னும் புத்தரையே சிந்தித்து அவர் போதித்துள்ள சத்தியதன்ம நீதிநெறி ஒழுக்கத்தின்று சாதிபேத மதபேதமென்னுங் கேடுபாடுகளின்றி அந்தணத்தொழிலிலும் அரசத் தொழிலிலும், வாணிபத் தொழிலிலும், வேளாளத்தொழிலிலும் நிலைத்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்க வழி நடந்து ஐயிந்திரியங்களை வென்ற புத்தராம் இந்திரர் தன்மத்தை ஏற்று இந்திர விழாக்களும் இந்திய திருக்களுங் கொண்டாடி வந்தவற்றால் இத்தேசத்தை இந்திய தேசமென்றுங் குடிகளை இந்தியர்களென்று வழங்கிவந்த ஆதரவைக்கொண்டு நாளதுவரையில் இந்தியர்களென்றே வழங்கப் பெற்று வருகின்றார்கள். அவர்கள் யாவர் என்பரேல் ஆயிரத்திச்சில்லரை வருடங்களுக்குள் இத்தேசத்திற் பிச்சையிரந்துண்டே குடியேறி நூதன வேதங்களையும் நூதன வேதாந்தங்களையும் உண்டு செய்துக் கொண்டுள்ள சத்துருக்களது மித்திரபேதக் கொடூரத்தாலும் வஞ்சினத்தாலும் நசுங்குண்டு பறையர்களென்றும் சாம்பார்களென்றும் வலங்கையரென்றும் பஞ்சமரென்றும் தாழ்ந்த சாதியோரென்றும் வகுக்கப்பட்டுள்ள ஆறுகோடி மக்களே யாவர். இவர்கள் யாவரும் இப்பிரிட்டிஷ் அரசாட்சியில் கல்வியிற் சீர்திருந்தி இராஜ விசுவாசத்தில் நிலைத்து சுகச்சீர் பெறுவார்களாயின் சுயராட்சியங்