பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 / அயோத்திதாசர் சிந்தனைகள்

போதிக்கும் ஓர் பீடமாதலின் போதியென்றும் அவலோகிதகர் வீற்றிருந்த மரப்பெயர் வழங்கி வந்தார்கள். அதன் மகத்துவப்பெயரை மராமரமென்றும் வழங்குவதுண்டு.

திரிவாசகம்

ஆத்திச்சுவட்டி லமர்ந்ததேவணை / ஏத்தி யேத்தித் தொழுவோமியாமே.

மணிமேகலை

ஆலமர்ச் செல்வன் மதன்விழாக்கோல்கொள.

தாயுமானவர்

செங்கமல பீடமேல் கல்லாலடிக்குள் வளர் / சித்தாந்த முத்திமுதலே.

வைராக்கிய சதகம்

ஆலநீழலி லன்றோ ரைவருக் / கறநெறியுரைத்தானை
காலகாலனை சிவப்பிரகாசவெண் / கண்மணிதனை யுன்னா
தேலவார் குழலார் மயல்கொண்டு நீ / யிங் குழலுவதெல்லாம்
சாலவே பிழையாகு நெஞ்சேசொனேன் / றவ நிலை யென்மேலே.

முன்கலை திவாகரம்

 கணவைம்பணையே மராமரம் போதி / யரசன் வீற்று மிருந்தலி லரசே.

ஓர் அரசபுத்திரனும் நம்மெய்ப்போன்ற தேகியுமாயிருந்து சுத்தஞானத் தெளிவால் ஜகத்குருவாக விளங்கி உலக சீர்திருத்தக்காரருள் ஆதியாகி உலக ரட்சகனுமாகி பரிநிருவாணமடைந்த பின் அவரது தேகத்தை தகனஞ்செய்த அஸ்தியையும், சாம்பலையும் நாளதுவரையில் தெரிசித்து வருகிறோம்.

உலகெங்குமுள்ள விவேகமிகுத்தோர் யாவரும் அவரை ஜகத்குருவென்றும், சீர்திருத்தக்காரருள் முதல்வரென்றும், புருஷர்களில் உத்தமரவரே என்றும், ஆசியா கண்டத்தின் ஆதியொளி என்றும் நாளதுவரையிலுங் கொண்டாடி வருகின்றார்கள்.

அன்னியன் பிள்ளையைத் தன் பிள்ளை என்று தாராட்டிய போதிலும் அதினந்தார்த்தத்தையும் குணக்குறிகளையும் அறிந்த விவேகிகள் அவற்றைத் தெளிவுற விளக்கிவிடுவார்கள்.

அதுவும் விளக்கவேண்டுமென்று கோறியவிடத்தில் விளங்குமேயன்றி அன்னியன் பிள்ளையை தன்பிள்ளை என்று சாதிக்குமிடத்து விளங்கமாட்டாது.

குணங் குறி யந்தரார்த்தம் உணர்ந்த பெரியோர்களும் மதகர்வங் கொண்டோர் முன் தோன்றி விளக்கவுமாட்டார்கள்.

- 3:23; நவம்பர் 17, 1909 –

37. மரணக் கிரியை

வினா: நமது சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள் மரணமடைந்துவிட்டால் அப்பிரேதத்தின் பெருவிரலைக் கட்டிவிடுவதும், சிரசினருகே தீபமேற்றி வைப்பதும், பிரேதம் எடுத்துக்கொண்டு போகுங்கால் நெருப்புச்சட்டி எடுத்துக்கொண்டு நெற்பொரியும், வெற்றிலையும் இறைத்துக்கொண்டுபோய் பிணத்தை பூமியிற் புதைத்துவிட்டு இரண்டாநாளேனும், மூன்றாநாளேனும் பால் கொண்டுபோய் பிரேதக் குழியின்மீது வார்த்துவிட்டுவருவதும் ஆகியக் கிரிகைகளின் விவரங்கள்.

வீ. பாலசுந்திரம், அரக்கோணம்.

விடை: முற்காலத்தில் புத்ததன்மம் இந்து தேசம் முழுவதும் பரவியிருந்தகாலத்தில் அவற்றை அநுசரித்துவந்த மக்கள் ஞானத்துக்குரிய நித்தியச்செயல்களைப் புகழ்ந்தும் அநித்திய செயல்களை இகழ்ந்தும் வருவது இயல்பேயாம்.

அதாவது ஞானசாதனம் உணர்ந்தும் இறந்தானென்றால் இகழ்ந்தும், சம ஆதியானானென்றால் புகழ்ந்தவற்றுள் தன்னை அறியாது இறந்தவன் கால்களின் பெருவிரலை சேர்த்துக் கட்டுவதின் காரணம் யாதெனில்.