பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 205

ஒவ்வொருவரும் திகைத்து ஆம் நீரும் இறப்பீரென்றால் அரசபுத்திரன் பயந்து பிணிக்குள்ளாவரேல் சக்கிரவர்த்தி சினப்பாரென்னும் பீதியால் மாறுத்திரமளிக்காது மௌனத்திருந்தார்கள்.

மறுமொழிக் கிடைக்காததை உணர்ந்த மன்னுபுத்திரன் தனக்கும் இதுவே முடிவாக்கும் என்றெண்ணி சாரதியை நோக்கி நாம் கண்ட காட்சிகள் போதும் இரதத்தை அரண்மனைக்குச் செலுத்தும் என்றார்.

உடனே சாரதி இரதத்தைத் திருப்பி சித்திர மாளிகைச் சேர்த்தான்.

இரும்பு மதில், வெள்ளி மதில், பொன் மதில் மூன்றையும் முன்பு புகழ்ந்து சென்றவர் அன்று மூன்றையும் மண்மதில் என்றிகழ்ந்து மாளிகைச் சேர்ந்தக்கால் அவர் முகத்தைக் கண்ட அசோதரை அருகிற் சென்று என் பிராணநாயகா! நீவீர் செல்காலிருந்த செந்தாமரை முகம் வருங்கால் வாடியதென்னோ என வினவினாள்.

அதற்கு அசோதரை நாயகன் பெண்ணே நாமிதுவரை அடைந்த சுகத்திற்குமேல் துக்கமிருப்பதைக்கண்டு வாட்டமுற்றேனென்றார்.

அவ்வகை துக்கத்திற்கு நான் காரணமோ என்றாள். உம்மெய்யோ, தந்தை மெய்யோ, எம்மெய்யோ, காரணமென்றறியேன் என மறுமொழி கூறி நித்திய கடனை நிகழ்த்தி வருங்கால் அசோதரைக்கோர் ஆண் குழந்தை பிறந்தது. அதைக் கேழ்வியுற்ற மண்முகவாகு சித்திர மாளிகைச் சேர்ந்து மைந்தனையும், மகவையுங் கண்டு வீரவாகு சக்கிரவர்த்தி வம்மிஷவரிசையில் இரகுவாகுத் தோன்றிய குதூகலத்தால் சித்தார்த்தரை அணுகி நங்குடிகளுக்கு யாது செய்யுதும் என்றான்.

ஊர்வலம் வருங்காற் கண்ட மூப்பன் வருமெயும் பிணியாளநிலமெயுந் தன்னுள்ளத்தைக் கவர்ந்திருப்பதால் மூப்பர்களுக்கு அன்னமும், ஆடையும், பிணியாளருக்கு மருந்தும் அளிக்கவேண்டும் என்றார்.

சீவகசிந்தாமணி - முத்தி

கனகடல் சுவரச்செல்லுங் கண மழைத் தொகுதிபோலு,
நனை மலர்ப் பிண்டி நாதன் நல்லறங் கொள்ளைசாற்றிப்,
புனைமுடி மன்னரீண்டிப் பொன்னெயிற் புறத்து விட்டார்,
வினை யுடைத் தின்ப வெள்ளம் விரும்பிய வேட்கையானே.

அடிசில்வைகளாயிரம் அறப்புறமும் ஆயிரம்
கொடியனார் செய்கோலமும் வைகறோரும் ஆயிர
மடி வில்கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம்
ஒடி விலையர் ஆயிரமோம்புவாரினோம்பவே.

சித்தார்த்தித் திருமகனுக்குக் குலமகன் பிறந்த குதூகலத்தால் தேசமெங்கும் பறையறைவித்து பிணியாளருக்கு மருந்தும் மூப்பர்களுக்கு அன்னமும் ஆடையும் அளிக்க வேண்டிய அறச்சாலைகளையும் அவுஷதச் சாலைகளையுங் கட்டி அறச்செயலை நிலைக்கச்செய்தார்கள்.

மணிமேகலை

மட்டறச்சாலையும் மருந்தினர் சாலையும், கட்டிடைச்சேவகக் காப்புடைத்தாக.

சிலப்பதிகாரம்

ஆயுள் வேதருங் காலக் கணிதரும், பால்வகைத் தெரிந்த பன்முறை இருக்கெயும்.

அறச்சாலைகளையும் அவுடதச்சாலைகளையும் நிருமித்த கருணையால் சித்தார்த்தரை தம்மராஜன் தம்மராஜனெனக் கொண்டாடினார்கள். குழவிபிறந்த மகிழ்வும் குடிகள் கொண்டாடும் புகழும் ஏககோஷத்தில் இருந்தபோதிலும் தம்மராஜன் உள்ளம் பிணி, மூப்பு, சாக்காடென்னும் மூவகைத்துக்க விசாரணையினின்றது.

அருங்கலைச்செப்பு

பிணிமூப்புச்சாக்காடிவை மூன்றும் ஆய்தற், துணிபுற்று நின்றானிறை.

>3.சித்தார்த்தர் வாய்மெய் விசாரிணைக் காதை

தம்மராசன் வாய்மெய் விசாரிணையில் மூழ்கி தனதரிய தந்தையை வரவழைத்து எனதருமெய் தந்தையே, நமதாளுகைக்கு உட்பட்ட தேயங்களி