பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வினையணுகாதுற்ற விழியுங் கரமுந், தினையணுகா நோயின் திரள்
பாசங்கள் தோய்ந்த பகுதி எதிர் பாச, நேசத் தொடரும்நெறி
விழியால் விலகுங் கையால் கழியுந் தொழிலாம் ஞானத் தொடர்.

அக்காலோர் தன்மந்திரி என்னும் தனவந்தன் பரத்துவாசரை அடுத்து தனக்குள்ள திரவியங்கள் யாவையுஞ் செலவிட்டு தேக குணாகுணங்களையும், வியாதியின் குணாகுணங்களையும், மூலிகைகளின் குணாகுணங்களையும், உபரச குணாகுணங்களையும், பாஷாண குணாகுணங்களையும் நன்காராய்ந்து பகவனது உத்திரவால் இந்திர வியாரங்களுக்கு அருகே வைதியசாலைகளை நிருமித்து ஏழைகளுக்குங் கனவான்களுக்கும் உண்டாய வியாதிகளுக்குத் தக்க அவுடதங்களை ஈய்ந்து சுகமுறச்செய்து வருங்கால் பரத்துவாசரை அடுத்த தன்மந்திரிக்கு ஓர் மனமாறுதல் தோன்றி மாதவனிடஞ் சென்று பிடகபோதனா சரகசூஸ்திரா உமது கருணையால் மனோ துக்கங்களை நீக்கும் பிடகபோதகங்களையும், தேகவுபத்திரவங்களை நீக்கும் அவுடதங்களாம் சூசரக போதங்களையும் அருளிச்செய்தீர்.

இத்தகைய போதகங்களால் மக்களுக்குள்ள மனோதுன்பங்களும், தேக துன்பங்களும் அகன்று ஆறுதல் அடைந்து வருகின்றார்கள்.

ஆயினும் உம்மெய் நெறுங்கிய வியாதியஸ்தர்களும், உமது பார்வைபெற்ற ரோகிகளும் சுகமடைகின்றார்களே அத்தகைய போதங்களை இவ்வடியார் களுக்கு அருள் புரியலாகாதோ என்றடிபணிந்தான்.

அவற்றை வினவிய பகவன் பரத்துவாசர் மாணாக்கனைநோக்கி தன் மந்திரி மனோரோகங்களை நீதிநெறி ஒழுக்கங்களாலும், தேக ரோகங்களை அவுடதப் பிரயோகங்களாலும் அவரவர்கள் தங்களுக்குத் தாங்களே உணர்ந்தும் அவுடதங்களைத் தாங்களே உண்டும் சுகமடைவதே கிரமமாகும்.

அங்ஙனமின்றி ஓர் ஞானியினது விழிபட்டும், கைபட்டும் சுகமடை வார்களாயின் அதன் கிரகிப்பு சுத்த ஞானிகளை யாதொன்றுந் தீங்கு செய்யாது.

தங்களைப் பெரியோனென்று மதிக்கவும், தங்களை சகலரும் கொண்டாடவும் வேண்டிய சொற்ப பற்றுள்ள ஞானிகளை அவர்களுக்குள்ள தீவினைகள் பற்றிக்கொண்டு ஞானியுந் துன்பமடைவான். ஆதலின் அத்தகைய ஆனந்தத்தை மறந்தும் கருதாதிருப்பீராக என்று மற்றுமுள்ள அவுடதப் பிரயோகங்களையும் விளக்கிவிட்டு மச்சநாடடைந்தார்.

தன்மந்திரியும் மற்றுந் தனக்குள்ள திரவியங்கள் யாவையுஞ் செலவிட்டு அவுடதப்பிரயோக தன்மஞ்செய்வதுடன் அறநெறியாம் நல்லொழுக்க தன்மங்களையும் ஊட்டிக்கொண்டு வந்தார்.

அக்காலத்தில் ஓர் வகைக் கொள்ளைநோய் தோன்றி அத்தேசவாசிகளில் அநேகர் மரணமடைந்தார்கள். அநேகர் திகிலடைந்தார்கள், அநேகர் மரண கிலேசமுற்று வருந்தினார்கள். அநேகர் பொய்ச்சந்தோஷங்கொண்டு எல்லோரையும் அழைத்து இன்றைக்கு யாவற்றையும் அனுபவித்துவிடுவோம் இன்றைக்கிருப்பதும் நாளைக்கு இருப்போம் என்பதும் நிட்சயம் இல்லை என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் திகிலடைந்தும் வெளிக்கு சந்தோஷமாகப் பேசிக்கொண்டார்கள்.

இவ்விதமான அவ்வூர் ஆண் பெண் யாவரும் மரண பயத்துடன் கிலேசமுற்றிருக்குங்கால் பரத்துவாச தன்மந்திரியார் ஒருவர் மட்டிலும் வழக்கம்போல் மன அமைதியுடனும், சமாதானத்துடனும் வீடுவீடாய் நுழைந்து வியாதியஸ்தர்களுக்கு வேண மருந்தளித்து வருவதுடன் வேண்டிய தேறுதல்களையும் சொல்லிக்கொண்டு வந்தார்.

அக்காலத்து ஒரு மனிதன் தன்னிடம் வந்து தனது குறைகளைக் கூற ஆரம்பித்தான்.

அதாவது என்னுடைய உள்ளம் பதைபதைக்கின்றது, மனந் தடுமாற்றமடைகின்றது, மக்கள் மரணமடைதலைப் பார்க்க சகிக்கக் கூடாதவனாய் இருக்கின்றேன், எனக்கு இறப்பு வருமாயின் யாது செய்வேன், அயலாரைப் பற்றிய அவசியம் ஒன்றுமில்லை, என் மரணத்தைப்பற்றிய கவலை