பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 417

கண்டார்கணின்னிலைமைகண்டொழுகயானின்கதிர் மயங்குசோதியாற்கண்விளக்கப்பட்டுத்
தண்டா அமரைமலரின்மே னடந்தாயென்றுந்தமனீயப்
பொன்னணையின் மேலமர்ந்தாயென்றும்
வண்டார சோகினிழல் வாயமர்ந்தாயென்றும் வாழ்த்தினால் வாராயோ
வானவர்தங்கோவே.
கருவார்ந்தபொருணிகழ்வுங் காலங்கண்மூன்றுங் கடையிலா நன்ஞானக்கதிரகத்தவாகி யொருவாதிங்கவ்வொளியினின்னுள்ளமாகிலுலகெல்லா நின்றுள்ளத்தே
ஒளிக்கவேண்டா
திருவார்ந்ததண்மார்ப தேவாதி தேவ திரளரையசெந்தனிரசோகமர்ந்தசெல்வ
வருவாரும் வையகமுநீயும் வேறாகி மணிமேனிமாலேமயக்குவதிங்கென்னோ
செங்கணெடுமாலே செறிந்திலங்குசோதித்திருமுயங்கு மூர்த்தியாய்செய்யதாமரையி னங்கணடிவைத்தருளுமாதியாயாழியறவரசே என்று நின்னடி பணிவதல்லா
லெங்கணிடரகலுமாறிந்நிலைமெயெய்தி யிருளுலக நீக்குமருடருகநீயென்று
வெங்கணிருவினையை யறவென்றாய் முன்னின்று விண்ணப்பஞ்செய்யும்
விழுத்தகை மெயுண்டோ.

சிலப்பதிகாரம்

அறிவ னறவோ னறிவுவரம் பிகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
றரும முதல்வன் றலைவன் றருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் றேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தி லொளியோன்
றத்துவன் சாதுவன் (சாரணன்) காரணன்
சித்தன் பெரியவன் செம்ம றிகழொளி
யிறைவன் குரவ னியல்குண னெங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கற னீசன் சயம்பு சதுமுக
னங்கம் பயந்தோ னருக னருண்முனி
பண்ணவ னெண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளி
யோதிய வேதத் தொளியுறி னல்லது
போதார் பிறவிப் பொதியறை யோரெனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதற்
காவுந் தியுந்தன் கைதலை மேற்கொண்
டொருமூன் றவித்தோ னோதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா
காமனை வென்றோ னாயிரத் தெட்டு
நாம மல்லது நவிலா தென்னா
வைவரை வென்றோ னடியினை யல்லது
கைவரைக் காணினுங் காணா வென்கண்
ணருளறம் பூண்டோன் றிருமெய்க் கல்லதென்
பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தா
தருக ரறவ னறிவோற் கல்லதென்
னிருகையுங் கூடி யொருவழிக் குவியா
மலர்மிசை நடந்த மலரடிக் கல்லதென்
றலைமிசை யுச்சி தானணி பொறாஅ
திறுதியி லின்பத் திறைமொழி யல்லது
மறுதர வோதியென் மனம்புடை பெயரா
தென்றவ னிசைமொழி யேத்தக் கேட்டதற்
கொன்றிய மாதவ ருயர்மிசை யோங்கி
நிவந்தாங் கொருமுழ நீணில நீங்கிப்
பவந்தரு பாசங் கவுந்தி கெடு கென்
றந்தர மாறாப் படர்வோர்த் தொழுது
பந்த மறுகெனப் பணிந்தனர் போந்து
காரணி பூம்பொழிற் காவிரிப் பேரியாற்று.

எனும் பஞ்சகாவியங்களின் ஆதாரங்கொண்டும், பாலிபாஷையிலுள்ளப் பிடகங்களின் ஆதாரங்கொண்டும், திராவிட பௌத்தருள் பிரபலமாக வழங்கிவந்த சுருதியின் அனுபவங் கொண்டும் வரைந்துள்ள முதநூலாம்.