பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434 / அயோத்திதாசர் சிந்தனைகள்

உண்டுசெய்து அரசவதிகாரிகள் காவலிடவும் அதி மூர்க்கரை அடக்கவும் பலர் தெண்டனையடையவும் பலசாதியோரும் பயித்தியவேஷமிட்டு தங்கடங்கள் மனம்போனவாறு ஆடியும் பாடியுந் திரிந்து சாராயக்கடைக் கள்ளுக்கடைகளே சதானந்தமாகவும் அதனிற் குடித்து வெறித்தோரெல்லாம் அல்லாசாமி பெயரை வழங்கவும் கோலத்தை மகமதியரென்னும் மகாமதியர்கள் யாவரும் பெருங்கூட்டமிட்டு இப்பத்து நாளைய பக்திக்குரிய காலத்தை மிக்க அமைதியாகவும் அன்பாகவுமிருந்து அம்மாகான்களின் சரித்திரத்தை எல்லவருக்கும் விளக்கி மகமதிய பாலியர்களுக்குள்ள அறிவைப் பெருகச் செய்விப்பதுடன் ஏனைய சாதியோர்களுக்குங் கூறி அமைதிபெறச் செய்வார்களென்று நம்புகிறோம்.

- 6:29; டிசம்சர் 25, 1912 –

95. சரியை கிரியை யோகம் ஞானம்

வினா: தற்காலந் தோன்றியுள்ள நூதன மதஸ்தர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானமென்று கூறி அவற்றுள் சரியை என்றால் கோவிலைமொழுகி சுத்தஞ்செய்வதும், சிலாதெய்வங்களைக் கழுவி புட்பமெரிதலும், மணிகுலுக்கி மந்திரஞ்செபித்தலும், கோவிலைச்சுற்றி வலம்வருதலென்றும்; கிரியை என்றால் மணியேந்தி மந்திரங்களை உச்சரித்தலென்றும்; யோகமென்றால் மூச்சை உள்ளுக்கிழுத்து அடக்குவதென்றும்; ஞானமென்றால் முத்தியடைவதென்றுங் கூறி இவற்றுள் சரியையை ஒருமனிதன் கிரமமாக செய்து மரணமடைவானாயின் மறு பிறவியிற் கிரியை அநுசரிப்பானென்றும், கிரியையை ஒருமனிதன் கிரமமாகச் செய்துவருவானாயின் மறுபிறவியில் யோகத்தை அநுசரிப்பானென்றும், யோகத்தை ஒரு மனிதன் சிரமமாகச் செய்வானாயின் மறு பிறவியில் ஞானத்தை அநுசரித்துக் கொள்ளுவானென்றுங் கூறுகின்றார்கள். இஃது யதார்த்த மொழிகளா அல்லது வேறேதேனும் பொருளுண்டா.

கோ. பாலசுந்திரம்: சோளிங்கபுரம்

விடை: தற்காலம் தோன்றியுள்ள நூதன மதஸ்தர்களுக்கு சாதியையே சாமியாகக்கொண்டு அதற்கான பொய்நூற்களை ஏற்படுத்திக்கொண்டு உள்ளவர்களாதலால் பௌத்தர்களால் வழங்கிவந்த மெய்நூற்களும் நீதிபோதங்களும் ஒழுக்க மொழிகளும் செவ்வனே விளங்காது தங்கடங்கள் மனம்போனவாறு ஒழுக்கமொழிகளை மாறுபடுத்திவிட்டார்கள். காரணமோ வென்னில், சூத்திரனாகப் பிறந்தவன் பிராம்மணனையே தெய்வமாகக்கருதி அவனுக்குத் தொண்டுசெய்து வருவானாயின் மறுபிறவியில் வைசியனாகப் பிறப்பானென்றும், வைசியனாகப் பிறந்தோன் பிராம்மணனுக்கே தொண்டு செய்து அவனுக்கு வேண்டிய பொருளளித்துவருவானாயின் மறுபிறவியில் க்ஷத்திரியனாகப் பிறப்பானென்றும், க்ஷத்தரியனாகப் பிறந்தோன் பிராம்மணனை சேவித்து அவன் சொற்படி அரசாண்டு வேண திரவியங்களைக் கொண்டு போஷித்துவருவானாயின் மறுபிறவியில் அவன் பிராம்மணனாகப் பிறப்பானென்றும் எழுதிவைத்துள்ளார்கள். அத்தகையக் காரியக் கட்டுக்கதையைக் காண்போரும் கேட்போரும் தற்காலம் பிராம்மணரென்று சொல்லிக்கொள்ளுவோரும் பலபேர் சூத்திரரை வணங்கி சூத்திரர்களுக்கு வேலை செய்து வருகிறார்களே அவர்கள் என்ன பிறவியில் பிறப்பார்களென்று தட்டிக்கேழ்ப்போர்கள் இல்லாததினாலேயாம்.

கல்வியற்றப் பெருங்குடிகளும், காமியமுற்ற சிற்றரசர்களும் அவர்களது பொய்க்கதைகளையே மெய்க்கதைகளென்றும் அவர்களது பொருளறியா மொழிகளையே சரிபொருளென்றுங் கொண்டாடிவருகின்ற படியால் பௌத்தர்களால் வழங்கிவந்த சரியை, கிரியை, யோக, ஞானமென்னும் ஒழுக்க மொழிகள் விளங்காது, அவர்கள் மனம் போனவாறு வழங்கிக்கொண்டார்கள்.

அதாவது உலகத்தில் தோன்றியுள்ள மனுக்களில் ஒருவன் தனது ஒழுக்கத்தில் நல்காரியத்தில் முயலுங்கால் அதனை சரிவர நிதானித்தலை சரியை என்றும், அவ்வகைநிதானித்துச் செய்யுஞ் செயலை கிரியை என்றும்,அக்கிரியை செவ்வனே முடிந்த அதிஷ்டபாக்கியமே யோகம் என்றும் அவ்வதிஷ்டபாக்கியம்