சமயம் / 451
பன்னவராதி முநிவரர் சித்தர்பதுமனை யாதியாம் பதமும்
விண்ணவராதிப் பதங்களைப் பார்க்கில் வித்தையென்றறிவதே விவேகம்.
3.பருத்தியால் நூலும் நூலினால்வர்ணப்படம்பல சுவர்க்க நிர்ப்பதமும்
துருத்தியால் காற்றுங் காற்றினாலங்கி துரும்பினால் தோற்றிடுஞ் சித்தங்
கருத்தெனுமொன்றா யொன்றினி லனந்தங்கற்பனை நினைவில் பல்பேதம்
விருத்தியால்வளரும் வேற்றுமெயெல்லாம்வித்தையென்றறிவதே விவேகம்.
4.மண்ணிலேமறைய மறைந்துபின்வருக மலையென வளர்ந்தெதிர் நிற்க
தண்ணியிற்கரைய தனித்துருவெடுக்க தரணியோர் கண்டுமெய்களிக்க
கண்ணிலே நுழைய கரியமால் முகில்போல் காலிலே தளையது பூட்ட
விண்ணின்மீதிருந்து பரந்துவந்துரினும் வித்தையென்றறிவதே விவேகம்.
5.கடல்வரவழைக்க மேருவையணைக்க கடமுயிர்ப் பெய்யவேசெய்ய உடல்பிறிந்தயலோ ருடலதிற்பாய வூரிலாவெளியி லூர்காட்ட
வடவனல்வளைக்க வஷ்டநாகங்களனைத்தையு முன்னிலையழைத்து
விடபலகோடி சித்துவாடிடினும் வித்தையென்றறிவதே விவேகம்.
6.தந்தையன்னையர் முன்தவ நிலையொடுக்கத் தனிமகா மேருவைக்காட்ட
சந்தையமில்லா சலத்தின்மேல் நடக்க சலத்தினை திரட்டியே யெடுக்க
பந்தியங்சொல்லி வடவைமேலிருக்க பருதியோடுடுமதியழைக்க
விந்தையுற்றதுன்னும் வேதையாடிடினும்வித்தையென்றறிவதே விவேகம்.
7.ஆணுறுவதனைப் பெண்ணுறுவாக்க வடுத்தபெண்ணுறு வையாணாக்க
காணுவதனைத்தும் பேதனஞ்செய்ய காமனைக்கண்ணெதி ரழைக்க
சேணுறுவெடுத்து சேணிடையொளிக்க செம்பொடு யிரும்பை பொன்னாக்க
வீணுறுவெடுக்கும் கற்பித சிந்தை வித்தையென்றறிவதே விவேகம்.
8.கரிபலகோடி வனத்திருந்தழைக்ககரடி சிங்கங்களை யாட்ட வரிபலகோடி யழைக்க மேற்கொள்ளவவனியைத் துறந்தறக்காட்ட
நரிபலகோடி பரியென நடத்திநஞ்சமுதாக்கியே கொடுக்க
விரிபலகோடி சித்தையாடிடினும்வித்தையென்றறிவதே விவேகம்.
9.நாட்டில் சஞ்சரிக்க நமனுறுகாட்ட நற்றவத்தோரென நடிக்க
ஏட்டினை நீரி லெதிர்க்கவே விடுக்கவெண்ணிலாவாகன மேற்க
காட்டினிலிருந்து மனதினி நினைக்கக்காமதேன் கற்பகமமைக்க
வீட்டினிலடைக்க வெளியில்வந்திடினும் வித்தையென்றறிவதே விவேகம்.
10.உம்பர் பூதங்கள் பணியவேநிற்க ஊமையாயிருந்தவன் பேச
தம்பமாய் அசையா மலையெனநிற்க தனிமகாமேருவைக் காட்ட
கம்பங்களேறி கழையர் கூற்றாடி காணாது கூப்பிடற் கேட்க
விம்பநோயகற்றுஞ் சித்தையாடிடினும் வித்தையென்றறிவதே விவேகம்.
- 7:41; மார்ச் 18, 1914 -