பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 611


(க.) அன்பிலா யாக்கை யழிவதே மேலாயதன்றி அஃது வுலக வாழ்க்கையைப் பெறுதலில் பயனில்லையென்பது கருத்து.

(வி.) உடலுக்கொற்ற வுறுப்புகள் யாவுங் குறைவற நிறைந்திருப்பினும் அன்பொன்றில்லாமற்போமாயின் அவ்வுறுப்புகள் யாவும் பயனற்றவனவாதலின் அகத்துறுப்பில் அன்பில்லாமற்போமாயின் புறத்துறுப்புகள் யாவுஞ் குறைவறவிருந்தும் பயனில்லையென்பது விரிவு.

10.அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு.

(ப.) அன்பின்வழிய - அன்பிற்கு வழியாக நிற்பது, துயிர்நிலை - உயிரின் றன்னிலை யென்னப்படும், யஃதில்லார்க் - அவ்வகையில்லாதோர், (உயிரற்ற) கென்புதோல் - என்பினையுந் தோலையும், போர்த்த வுடம்பு - மூடிக்கொண்டுள்ள தேகமென்பது பதம்.

(பொ.) உயிரிற்கு ஆதாரமாகவும் பீடமுமாகவும் நிற்பது அன் பென்னப்படும், அவ்வன்பில்லாவிடத்து உயிருமில்லாமற்போம். அவ்வுயிரு மில்லாதவிடத்து எலும்புந் தோலும் போர்த்த வுடலே வுள்ள தென்பது பொழிப்பு.

(க.) உயிர்நிலைக்குறுதி யன்பும், அன்புக்குறுதி உயிர்நிலையுமா யுள்ளபடியால் அன்பில்லாவிடத்து உயிரில்லையென்றும், உயிரில்லாவிடத்து என்பு தோல்போர்த்த வுடலையொக்குமென்பது கருத்து.

(வி.) அன்புபெருகியவிடத்து உயிர்வாழ்க்கைப் பெருகுமென்றும் அன்பு பெருகாவிடத்து உயிர்வாழ்க்கையுங் சிறுகுமென்பது அநுபவக்காட்சியாதலின் அன்பிலார் உயிரற்ற வுடலுக் கொப்பவரென்பது கண்டு அன்புநிறைந்த வுயிர்நிலையில்லார் என்புதோல் போர்த்த வுடம்பென்று கூறிய விரிவு.


9. விருந்தோம்பல்

இல்லற வாழ்க்கையை இனிது நடாத்துவோர் அன்பு பொருந்தி வாழ்கின்றாரென்பதற் கறிகுறியாவது யாதெனில்:- மனுக்களென்னும் பெயர் கடந்து தெய்வப்பெயர்பெற்றுலாவும் அறஹத்துக்களும், சங்கங்களிலுள்ள சமணமுநிவருள் புலன் தென்பட்ட தென்புலத்தோர்களும், தேடிவரும் உரவின்முறையோர்களும், நாடிவரும் உரவின்முறையோர்களும், அனாதை ஆதுலர்களும், எப்போது தனதில்லந் தேடிவருவார்க ளென்றெதிர்பார்த்திருந்து சோறிடுதலை விருந்தோம்பலென்று கூறப்படும்.

1.இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மெ செய்தற் பொருட்டு.

(ப.) இருந்தோம்பி - தன்னைக் காத்து, யில்வாழ்வதெல்லாம் - இல்லற தன்மத்தை நடாத்துவதில், விருந்தோம்பி - வரும் விருந்தினரைக்காத்து, வேளாண்மெ - ஈகையுடன் விவசாயத்தை, செய்தற்பொருட்டு - விருத்தி செய்வதற்கேயா மென்பது பதம்.

(பொ.) இல்லற தன்மத்தை சரிவர நடாத்துவோன் ஈகைக்கு ஆதாரமாம் விவசாயத்தை விருத்திசெய்து தன்னைநோக்கும் விருந்தினரைக் காக்கவேண்டும் மென்பது பொழிப்பு.

(க.) இல்லறத்திருந்து விவசாயத்தை விருத்திச்செய்ய விரும்புவோன் தன்னை நாடும் விருந்தினரைக் காத்தல்வேண்டுமென்பது கருத்து.

(வி.) அன்புபொருந்தி இல்லாளோடிருந்து சுகவாழ்க்கைப்பெற விரும்புவோன்மேழிச் செல்வமாம் விவசாயத்தை விருத்திச்செய்யல்வேண்டும். அவ்விவசாயவிருத்திக்கு வருவிருந்தைக்காத்தலே வித்தாதலின் விருந்தோம் பலுக்குக் காரணம் வேளாண்மெ செய்தற்கென்று கூறியவற்றிற்குச் சார்பாய் பாசமாட்சி "வேளாண்மெ செய்து விருந்தோம்பி வெங்களத்து, வாளாண் மெயாலும் வலியராய்த்-தாளாண்மெ, தாழ்க்குமடிகோளிலராய் வருந்தாத, வாழ்க்கைதிருந்துதநன்று" இஸ்காந்தம், "துறந்தவர்கள் வேண்டியதோர் துப்புரவு நல்கி, யிறந்தவர்களாமுறுமிருங்கடனியற்றி, யறம் பலவுமாற்றி விருந்தோம்பு