பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 621

 (பொ.) செய்த உதவியின் நன்றியை மறவாதோர்க்கு மேலும் மேலும் உதவி புரிவோர் எக்காலும் அவர் நன்றியைப் பெறுவார் என்பது பொழிப்பு.

(க.) ஒருவருக்குச் செய்த உபகாரத்தை அன்னோர் மறவாதிருப்பாராயின் மேலும் மேலும் அவர்களுக்கு உதவி புரியலாம் என்பது கருத்து.

(வி.) கல்லின்மேல் வரைத்தவரைபோல் செய்நன்றியை மறவாதிருத்தலே நல்லோர் செயலாதலின் அன்னற்செயலை உள்ளார்க்கு மேலோர் எக்காலும் உதவி புரிவார்கள் என்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் “திடநிலையவுபகாரச் செய்நன்றி மறவார்க்கு, வுடநிலைமே லுபகார முள்ளளவுஞ் செய்திடுவார், அடவிநிலைசென் றாங்கு மாதாரங் கொண்டிடுவர், கடல் மடைபோற் பெறுபேற்றுக் காட்சியதன் பயனாகும்” என்னும் கல்லின்மேல் வரைத்தன் வரைபோல் நன்றி மறவாதார்க்கு என்றென்றுஞ் சுகமுண்டு என்பது விரிவு.

6.மறவற்க மாசற்றார் கேண்மெ துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

(ப.) மாசற்றார் - களங்கமற்ற நெஞ்சினர், கேண்மெ - சிநேகத்தை, மறவற்க - மறவா திருத்தல்வேண்டும், துன்பத்துட்- துன்பமுண்டாயகாலத்தில், டுப்பாயார் - உதவிபுரிந்தவர்களின், நட்பு - நேயத்தை, துறவற்க - அகலாதிருக்க வேண்டுமென்பது பதம். -

(பொ.) மனமாசு கழுவியுள்ள மேன்மக்களின் கூட்டுறவை மறவாதிருத்தல் வேண்டும். தனக்குத் துன்பம் நேரிட்டகாலத்தில் உதவி செய்தவர்களின் சார்பை அகலாதிருக்க வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) களங்கமற்றோர் கேண்மெயை எக்காலும் மறவாதிருத்தல் வேண்டும், அவைபோல் ஆபத்து காலத்தில் உதவி புரிந்தோர் நேயத்தை என்றும் அகலாதிருத்தல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) மனமாசுக் கழுவியுள்ள மகான்களின் பார்வையால் அனந்தசுக முண்டாயதைக் கண்ட நமதையன் ஆபத்துகாலமறிந்து உதவி செய்த மேன்மக்களை அகலாதிருத்தல் வேண்டுமென்று கூறற்கு முன் களங்கமற்றோர்காட்சியை மறவற்கவென்று கூறியவற்றிற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில், வடுத்தீர்ந்தாருண்ணிற் பெறலாம் - கொடுத்தாரைக் கொண்டுய்யப்போவார் குணமுடையா ரல்லாதார், உண்டீத்து வீழ்வார் கிழக்கு" என்னும் ஒருவன் ஆபத்துகாலத்து உண்டாய ஈகையே ஈசனென்னு மொழி ஏற்றலால் அதன் பீடமே களங்கமறற்கு காட்சி என்று விளித்த விரிவு.

7.எழுமெ யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைப்பவர் நட்பு

(ப.) எழுமெ - எழுவகைத் தோற்றமாம், யெழுபிறப்பு - ஏழுவகைப்பிறப்பினும், தங்கள் - தங்களுடைய, விழுமந் - துன்பத்தை, துடைப்பவர் - அகற்றினவர்களின், நட்பு - அன்பின்மிகுதியை, முள்ளுவர் - தங்களுள்ளத் தகலாதிருத்துவரென்பது பதம்.

(பொ.) நல்லவர்கள் பெற்ற உதவியைத் தங்கள் எழுவகைத் தோற்றத்தினும் மறவார்கள் என்பது பொழிப்பு.

(க.) பெரியோர்களால் பெற்ற உபகாரத்தை நன்றியுள்ளோர் தங்கள் எழுபிறப்பினும் மறவார்கள் என்பது கருத்து.

(வி.) நல்லோர் தங்கள் துன்பத்தை அகற்றி ரட்சித்த மேன்மக்களின் செயலை தங்கள் எழுவகைத் தோற்றங்களாகிய தேவர், மக்கள், விலங்கு, பட்சி, ஊர்வன, நீர்வாழ்வன, தாபரமாயவற்றுள்ளும் மறவார்களென்னும் முதுமொழிக்குச் சார்பாய் அறநெறித்தீபம் "பாபத்தைத் தீர்க்கும் வாய்மெய்ப் பெருமொழி நான்கினுக்குங், கோபத்தை யடக்கி யாண்டு குணக்குன்றி லேறினோர்க்கும், ஆபத்தை தீர்த்து காக்கும் அரியநல்லுபகாரிக்குந், தாபத்தினன்றிகற்குஞ் சோபமே பயனாமன்றோ” என்னும் நல்லோராயுள்ளோர் மற்றோரல் செய்நன்றியை எத்தோற்றத்தினும் மறவார்கள் என்பது விரிவு.