பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /81

அதனையிதனடியில் வரைகின்றோம் கண்டுக்கொள்க.

சென்னை பெத்துநாய்க்கன்பேட்டை மா. கதிர்வேலு கவிராயர் பாடிய சீட்டுக் கவி வேதநாயகன் பாட்டு நாதமற்ற வேட்டு


கங்கைசூ ழுலகினிற் கனசைவ மததெய்வ /காங்கேயனைத் துதித்தோர்
கண்டு மதை கைவிட்டு கிறீஸ்தவனு மாகியே / கான்மாடு தலைமாடெனந்
கண்டறிய வகையற்று கவிபாடி வெளிவந்த / கட்டுரையை யென்சொல்லுவேன்
கற்றுசொற் சுவையற்ற வழவழக் குழகுழக் / கலிப்பாவை வரையவந்தும்
அங்கை நெல்லிக்கனியை யறியாத மோழைநீ / ரகத்தியர் ஞானமதிலே
அரியகுற்றங் கண்ட ததுவெது அரைகுவீர் / அவ்வையார் நூலதனிலே
ஆண்ட குற்றங்களெது வதனையும் புகலுவீர் / அலங்கோல கவியுளார் நீர்
அருணகிரி யான்பாட லின்சுவையையறியாது / வகற்றிநீர் போலுமறிவேன்
பங்கஜ மமைந்தப் பிராட்டியின் முதுமொழிப் / பேற்றை யறியா குறைவினால்
பருகிழவி யென்றுமே பாரறிய கூறினீர் / பாதகம் ஒன்றுமில்லை
பலபாவில் முதலாய பாகுறட் பாவிலே / பருகாம குறையென்றநீர்
பல்லரும் பிள்ளைகளை பெற்றுமது சுகமதைப் / பேணா துரைத்துவிட்டீர்
மங்காத மாணிக்க வாசகரை மனமாற / வாயாற திருடனென்றீர்
மற்றுமும துத்திருட் டதனாலே வெளிவந்த / வாசகம் அறிகிலீரோ
முத்துதாண்டவர்பாடல் தாயுமான் பாடல் போல் / வாயுரை யுரைக்க வலதோ
மறைமுதற் கதிர்வேலு கவிராய னோதினேன் /வல்லுரேல் வெளிவருகவே.

சுக்கில வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் எனப் பாடி அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பு வேதநாயக சாஸ்திரியார் கூறியுள்ளதை யாம் கண்டிலோம். தமிழ் வித்துவான்களது வல்லபத்தைக் கன்னட நாட்டார், தெலுகுநாட்டா ரறியாரென்பது அநுபவக்காட்சியாயிருக்க மூவுலகு மறியுமென்பது முற்றும் பிழையேயாம்.
அஃது தன்னைப் புகழத்தகும் புலவோர்க்கே என்னும் அலங்காரமொழி என்னப்படும்.

- 6:47; ஏப்ரல் 30, 1913
 

107. வைணவர் சூடுபோட்டுக் கொள்ளும் சங்கைத் தெளிவு

ஆர் ஆர். தாஸ்னென்னும் அன்பரே! பஞ்சமர் பறையரென்பவர்கள் சூடுபோட்டுக்கொண்டு மூன்றுவேளை குளித்து நான்குவேளை நெடுக்குப் பூச்சு பூசி சுஜாதியை அணுகாமலும் சேர்க்காமலும் "சூடுகொண்டப் பூனை அடுப்பங்கட்டை அணுகாதென்னும் " பழமொழிபோல் தூர தூர விலகினிற்கினும் பஞ்சமன் பறையனென்னும் பெயர் அவர்களைப் பதிந்து நிற்குமேயன்றி அகன்றுநிற்காவாம். இதன் விவரம் சாதிபேதமுள்ள வைணவர் கோவில்களுக்கும் அவர்கள் வீடுகளுக்கும் போவார்களாயின் சூடுபோட்டுக் கொண்டவர்களின் சாதிப்பெயர் பரக்க விளங்கிப்போம். அவர்களிடம் இவர்கள் சூடு செல்லாது சிலகாலங்களுக்கு முன் சென்னையிலுள்ளப் பறையர்கள் சூடுபோட்டுக்கொண்டு பட்டை நாமம் பரக்க சாத்தி அவர்கள் வீட்டில் சாப்பிடமாட்டோம் இவர்கள் வீட்டில் சாப்பிடமாட்டோம் எனப் படாடம்பங்காட்டினோரெல்லாம் குலத்தோரில் எவன் வீட்டில் கலியாணசோறு கிடைக்கும் எவன் வீட்டில் கருமாதி சோறு கிடைக்கு மென்னுங் கண்ணோக்கமிட்டலைகின்றார்கள். இவைகள் யாவும் துட்டு கொழுப்பின் ஆசாரங்களேயாம்.

- 6:51; மே 28, 1913 –
 

108. நடராஜன்

வினா : ஐயா! சைவசமயத்தோரெனத் தற்காலந் தோன்றியுள்ளவர் தங்கள் தெய்வமாகிய சிவனை நடராஜன் நடராஜனென வழங்கிவருகின்றார்களே அதன் செயலென்ன. அப்பெயர் அவர்கள் தெய்வத்திற்குப் பொருந்தியதா, ஏனவ்வகை வழங்கிவருகின்றார்கள்.

வே.ம. சிங்காரம், பூதூர்.

விடை : அன்பரே! தாம் வினவியுள்ள சங்கையில் சைவரென்போர் கொண்டாடுந் தெய்வத்திற்கு நடராஜனென்னும் பெயரும் பொருந்தாது அந்நார்க் கதன் சரித்திரமுங்கிடையாது.