பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 197


அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமாச்
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால், குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் மறிகடல் ஒத்தது அவ்வயோத்தி மாநகர்

(45)

குறியவன் = குள்ளமான அகத்தியன். கடலில் மறைந்து கொண்ட விருத்திராசுரன் என்னும் அரக்கனைக் கண்டு பிடிப்பதற்காக இந்திரனது வேண்டுகோளின்படி அகத்தியர் கடல் நீர் முழுவதையும் குடித்து விட்டார்என்பது புராணக்கதை.

சித்திரச் சுவர்

மத்தளம் முதலிய பலவகை இயங்களோடு செல்லினும் ஒலிக்காமல் அமைதியாய்ச் செல்லும் படை, சுவரில் ஒவியம்ாகத் தீட்டப்பட்டுள்ள படையைக் காண்பது போல் இருந்தது.

மத்தளம் முதலிய வயங்கு பல்லியம்
ஒத்தன சேறலின் உரை இலாமையின்
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அப்படையின் ஈட்டமே

(49)

'சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருந்த முகம் (சுந்தர காண்டம்- காட்சிப் படலம்-20) எனக் கம்பர் பின்னர் ஓரிடத்தில் கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

கங்கை காண் படலம்

எலியும் புலியும்

இராமனைக் கொல்லப் பரதன் படையுடன் வருவ தாகத் தவறாக எண்ணிய குகன் கூறுகிறான்: இந்தப் படைகள் யாவும் எலிகள்- யானோ இவற்றைக் கொல்லும் பாம்பு என்று கூறி, உலகில் உள்ள புலிகளை