பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


அந்த மாமுனிவரின் கருணைக்காகக் காத்திருக்கும் பக்த கோடிகளின் கணப்பொழுதையும் பழுதாக்காமல், விழியூகத்தால் அவர்களை அருள்பாவித்து, ஆன்மிக நெறிகளை வளர்க்கும் அருளாட்சி வித்தகர் அவர்.

வண்டியில் பூட்டிய மாடுகளைக் கவனித்து ஒட்டினால், வண்டிக்குப் பழுதல்ல - ஓட்டிக்கும் அழிவல்ல.

அதை நன்குணர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமது ஆன்மீக வண்டியில் ஞான மக்களை ஏற்றிச் செல்லும் பாங்கு, அருமை ஒழுக்கம், அவர்களின் இம்மைக்கும் - மறுமைக்கும் நற்பாதைகளை வகுக்கும் வழித் தடங்களாக அமைந்துள்ளன.

தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்விக அற்புத சக்திகள் உண்டு.

எடுத்துக்காட்டாக 'அன்' என்ற விகுதி ஆண்பாலுக்கும், ‘அள்' என்ற விகுதி பெண்பாலுக்கும் சுட்டும் இலக்கண விதிகளாகும்.

ஆனால், 'இ' என்ற விகுதி, பெண்பாலுக்குச் சிறப்பர்கவே அமைவதுமுண்டு என்று கருதுகிறேன்.

இராமன், விக்கிரமன், பகவன், முருகன், வில்லாளன், நடராசன், முருகேசன் என்ற பெயர்களில் வரும் விகுதியான 'அன்' என்ற அசையை நோக்குங்கள். ஆண்பால் பெயர்களைச் சுட்டுகிறதல்லவா?

சுந்தரி, காவிரி, பொன்னி, இலட்சுமி, மீனாட்சி, காமாட்சி, அங்கையர்க்கண்ணி, பார்வதி, வள்ளி, கயல்விழி, தமிழரசி, மலர்விழி, என்ற பெயர்களின் விகுதியான இ என்ற எழுத்தும் பெண்பாலைக் குறிக்கின்றனவா? - இல்லையா?

மதுரை மாநகரிலே தடாதகைப் பிராட்டி, பெண்ணரசியாய் வீற்றிருந்து, இந்தப் பரந்த வியனுலகை ஆட்சி செய்வதைப் போல நமது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பெயரில், இறுதி எழுத்தாக'இ' இகரமாக அமைந்திருப்பதால், அந்த மகான், காஞ்சி சங்கரர் மடத்திலே தடாதகைப் பிராட்டியைப் போல, தெய்வச்சக்தியுடன் வீற்றிருந்து ஆன்மிக உலகை ஆட்சி செய்து வருகிறார் என்று எண்ணுகிறேன்.

140